ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிக்கும் ஒரே நாளில் திருமணம்

Added : நவ 08, 2019 | கருத்துகள் (14)
Advertisement
 ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிக்கும் ஒரே நாளில் திருமணம்

திருவனந்தபுரம் : கேரளாவில், ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு சகோதரிகளுக்கு, ஒரே நாளில் திருமணம் நடக்க உள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரேம குமார் - ரமா தேவி தம்பதிக்கு, 1995ல், ஒரே பிரசவத்தில், நான்கு பெண்கள், ஒரு ஆண் என, ஐந்து குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள், உத்திர நட்சத்திரத்தில் பிறந்ததால், உத்ரஜா, உத்ரா, உதாரா, உத்தமா, உத்ராஜன் என பெயர் வைத்தனர்.சாதாரண வியாபாரியான பிரேம குமாரால், குடும்பத்தை நடத்துவது பெரும் கஷ்டமாக இருந்தது.

நிதி சிக்கல் காரணமாக, பிரேம குமார், 2004ல் தற்கொலை செய்துகொண்டார். குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்ட ரமாதேவி பற்றி, ஊடகங்களில் செய்தி வெளியானது.இதையடுத்து, கேரள அரசு, ரமாதேவிக்கு, திருவனந்தபுரத்தில் கூட்டுறவு வங்கி ஒன்றில் வேலை வழங்கியது. இதை வைத்து, குழந்தைகள் படிக்க வைத்தார் ரமா தேவி. இப்போது ஒரு பெண், ஆடை வடிவமைப்பாளராகவும், இரண்டு பெண்கள், அறுவை சிகிச்சை மயக்கவியல் நிபுணர்களாகவும், ஒரு பெண், 'ஆன்லைன்' எழுத்தாளராகவும் உள்ளனர். உத்ராஜன், பொறியாளராக உள்ளார். இந்நிலையில், நான்கு பெண்களுக்கும் திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது.

நான்கு பேருக்கும் அடுத்த ஆண்டு, ஏப்ரல், 1ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. இது பற்றி ரமாதேவி கூறுகையில், 'என் கணவர் இறந்த பின், குழந்தைகளுக்காக வாழ்ந்தேன். ஒவ்வொரு தடைகளையும் தாண்டி வந்தேன். 'குழந்தைகள் அனைவருக்கும், சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற என் கணவரின் கனவை நனவாக்கியுள்ளேன். என் மகள்களின் திருமணத்தை, ஒரே நாளில் நடத்த வேண்டும் என முடிவு செய்து, திருமணம் நிச்சயித்துள்ளேன்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
13-நவ-201919:48:46 IST Report Abuse
Sampath Kumar லக்கி கேள்ஸ் இங்க ஒண்ணுக்கு கூட நடக்க ரோம்ப சிரம படுரோம்
Rate this:
Share this comment
Cancel
Rajavel - Ariyalur,இந்தியா
13-நவ-201918:18:08 IST Report Abuse
Rajavel வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
13-நவ-201908:32:04 IST Report Abuse
shyamnats நான்கு மாப்பிள்ளைகளின் விவரங்களையும் தெரிவித்திருக்கலாம். பாராட்டுக்குரிய வீர அம்மா. அப்பா போல கோழையாக உயிரை விடாமல் பிள்ளைகளை நல்ல விதமாக வளர்த்ததற்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X