'காஷ்மீர் விவகாரம் தீர பேச்சுவார்த்தை நடத்துங்க'

Added : நவ 09, 2019 | கருத்துகள் (3)
Advertisement

லண்டன் : ஜம்மு - காஷ்மீர் நிலவரம் குறித்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள, பாதுகாப்பு நிபுணர்கள் ஆலோசித்தனர்.

இந்தப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண, பேச்சு நடத்துமாறு, இந்தியாவையும், பாகிஸ்தானையும் அந்த குழுவினர் அறிவுறுத்தினர்.பிரிட்டன் தலைநகர் லண்டனில், பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பிரிட்டனின் முன்னாள் பிரதமர்கள் தெரசா மே, கேமரூன் ஆகியோருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவரும், ஐக்கிய நாடுகள் சபையில், பிரிட்டனின் பிரதிநிதியாக இருந்தவருமான, மார்க் லியால் கிரான்ட் பேசியதாவது:காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண, 2001ல், அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயும், பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பும் நடத்திய பேச்சில் வழி ஏற்பட்டது.

ஆனால், அதை பயன்படுத்திக் கொள்ள, இரு நாடுகளும் தவறிவிட்டன.வடக்கு அயர்லாந்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது போல, காஷ்மீர் பிரச்னைக்கும் தீர்வு காணலாம். இதற்கு, இந்தியாவும், பாகிஸ்தானும், பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற, இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தியாவை சேர்ந்த, 'டிவி' நிருபர், நிதி ரஸ்தான் கூறுகையில், 'காஷ்மீரை கைப்பற்ற முடியாத ஆத்திரத்தில், அங்கு, பயங்கரவாதம் என்ற மறைமுகப் போரை, பாகிஸ்தான் துாண்டி விடுகிறது, பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளதை, அந்நாட்டு பிரதமரே ஏற்றுக் கொண்டுள்ளார்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish -  ( Posted via: Dinamalar Android App )
10-நவ-201916:04:40 IST Report Abuse
Sathish பிரிவு காரணமே அந்த நல்லவங்கதான். இதுல ஐடியா வேற கொடுக்குறாங்க!!!😊 ரெம்ப நல்லவங்க சார் நீங்க...
Rate this:
Share this comment
Cancel
Sathish -  ( Posted via: Dinamalar Android App )
10-நவ-201916:04:51 IST Report Abuse
Sathish பிரிவு காரணமே அந்த நல்லவங்கதான். இதுல ஐடியா வேற கொடுக்குறாங்க!!!😊 ரெம்ப நல்லவங்க சார் நீங்க...
Rate this:
Share this comment
Cancel
சமத்துவம் - Chennai,இந்தியா
09-நவ-201905:42:14 IST Report Abuse
சமத்துவம் பிரிட்டன், உங்க திருவாய மூடிக்கொண்டு பிரெக்ஸிட் வேலைய மட்டும் பாருங்கள். வேணுமின்னா ரொம்ப ஆசையா இருந்தால் பாகிஸ்தானிகளை தலையில் வைத்து கொண்டாடுங்கள்.அவன் அதற்கு நன்றிக்கடனாக உங்கள் படுக்கைக்கு கீழே குண்டு வைத்து சொர்கத்துக்கே அனுப்புவான். இருக்கும் காஷ்மீரையும், இழந்த காஷ்மீரையும் எப்படி மீட்பதென்று இந்தியா பார்த்துக்கொள்ளும். தீவிரவாதத்தை தொழிலாக கொண்ட ஒரு நாட்டினை, உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மதித்து பேச வேண்டும் என்று கூறுவதில் இருந்தே தெரிகிறது உங்கள் முதலை கண்ணீர் அக்கறை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X