அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கூட்டணி வெற்றி அடுத்த தேர்தலிலும் தொடரும்: முதல்வர்

Updated : நவ 10, 2019 | Added : நவ 09, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
ADMK,அ.தி.மு.க., கூட்டணி, வெற்றி,தேர்தல், தொடரும்,முதல்வர், பழனிசாமி, OPS, ஓபிஎஸ்

விக்கிரவாண்டி : ''அ.தி.மு.க. கூட்டணி தான் உள்ளாட்சி தேர்தலிலும் 2021 சட்டசபை தேர்தலிலும் வெற்றிபெறும்'' என முதல்வர் பழனிசாமி பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வெற்றி பெற்றதை தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் விக்கிரவாண்டியில் நேற்று மாலை நடந்தது.

இதில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எம்.பி. தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடத்தில் கூறி வெற்றி பெற்றார். இதை உணர்ந்த மக்கள் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய 'அல்வா'வை கொடுத்துவிட்டனர்.பலர் 2021 தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிக்கு வரப் போவதாக கூறி வருகின்றனர்.

68 ஆண்டு காலம் வேறு தொழிலில் இருந்து விட்டு அரசியலிலும் தொழில் போல் வரலாம் என நினைக்கின்றனர்.அ.தி.மு.க. கூட்டணி தான் உள்ளாட்சி தேர்தலிலும் 2021 சட்டசபைத் தேர்தலிலும் வெற்றி பெறும். அ.தி.மு.க.வில் வெற்றிடம் நிலவுவதாக கூறினர். ஆனால் இந்த இடைத்தேர்தல் வெற்றி அதற்கு முற்றுப்புள்ளி வைத்து அ.தி.மு.க.வில் வெற்றிடம் இல்லை என்ற நிலையை உருவாக்கி மக்கள் நற்சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ஸ்டாலினுக்கு தி.மு.க. தலைவர் பதவியை அவரது தந்தை கருணாநிதியே கொடுக்க முன் வராத போது தமிழக மக்கள் எப்படி ஆட்சியை ஸ்டாலினிடம் கொடுப்பார்கள். தந்தையே நம்பாத மகனை நம் மக்கள் எப்படி நம்புவார்கள். இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-நவ-201907:35:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் 40 க்கு 2... தொடரும்..
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
09-நவ-201915:46:09 IST Report Abuse
Lion Drsekar மக்களின் பிரச்சனைகளை அவ்வப்போது நிவர்த்தி செய்து அதிகாரிகளின் கைகளில் இருந்து மக்களை மீட்டு குறைகளை போக்கி , நல்லாட்சி நடத்தினால் நல்லது வந்தே மாதரம்
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
09-நவ-201915:08:54 IST Report Abuse
PANDA PANDI சரியே. 38.பாராளுமன்ற தொகுதிகளில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி ஒட்டு மொத்த தமிழகத்தில் 17%.ஒட்டு வாங்கி கட்சியின் சுவடில்லாமல் போன பிறகு.. இப்போது இரண்டு MLA.தொகுதிகளில் ஒவ்வொரு வோட்டுக்கும் ரூ .2500.00.கொடுத்து வெற்றிபெற்றுவிட்டு இப்போது என்னமோ 234.தொகுதிகளிலும் வெற்றி பெற்றது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துவது அறிவீனத்தை தான் வெளிப்படுத்தும் என்பதை கூட அறியாதவர் காரணம் சசியின் பயனாக முதல்வர்பதவி அடைந்த தியாகி பழனிசாமி என்பது உலகமே நேரலையில் கண்ட உண்மை.. தனது உணர்வு அத்தனையும் அடகுவைத்து இப்போது புனிதராக பேசுவதை அதிமுக உறுப்பினர்கள் சிலர் மட்டுமே ஏற்பார்கள்.. புள் பச்சைநிறத்தில் இருக்கும்வரை பசுக்கள் மேயும் அதன் பின் வெற்றிடமே மிஞ்சும் .. கொஞ்சம் கூட நா கூசாம இப்படி அறிவற்று பேசி மேலும் மேலும் தன் நிலை தாழ்வதை உணராத பழனிசாமிக்கு அனுதாபங்கள் மிஞ்சும்
Rate this:
மாயவரத்தான் - chennai,இந்தியா
10-நவ-201917:47:16 IST Report Abuse
மாயவரத்தான் தந்தை தமிழக முதல்வர் தான் துணை முதல்வர் ஆனாலும் உருப்படியாய் ஒன்றும் செய்யவில்லை. தான் சென்னை மாநகர மேயர்,தந்தை முதல்வர் ஆனாலும் உருப்படியாய் ஒன்றும் செய்யவில்லை.இப்படி தமிழக மக்களிடம் நல்ல பெயரை வாங்கக்கூடிய நல்ல பல சந்தர்ப்பங்கள் வந்தபோதும் அதை பயன்படுத்தாமல் கோட்டை விட்டு விட்டு மாவட்ட செயலாள நண்பர்களுடன் கூத்தடித்து விட்டு இப்போது அடுத்து நாங்கள்தான் என கதறி என்ன பயன் ? ஆனால் எடப்பாடி அதிர்ஷ்டத்தால் கிடைத்த பதவியை பயன்படுத்தி தமிழகத்தில் கல்வி உள்ளிட்ட பல துறைகளில் சீர்திருத்தம் செய்து,அரசு ஊழியர் உள்ளிட்ட பல போராட்டங்களை திறமையாய் ஒடுக்கி திமுகவை விட நல்ல ஆட்சியே வழங்கி வருகிறார். ஸ்டாலினை விட திறமையானவர் எடப்பாடியே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X