அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழில் ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வு ராமதாஸ், தினகரன் வலியுறுத்தல்

Added : நவ 09, 2019
Share
Advertisement

சென்னை : 'ஐ.ஐ.டி. நுழைவு தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச்செயலர் தினகரன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

ராமதாஸ் அறிக்கை:ஐ.ஐ.டி. என்றழைக்கப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கான கூட்டு நுழைவு தேர்வு இந்த ஆண்டும் ஹிந்தி ஆங்கிலத்துடன் குஜராத்தியிலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐ.ஐ.டி. நுழைவு தேர்வை 10 மொழிகளில் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. எனவே 2020ம் ஆண்டிலிருந்து ஐ.ஐ.டி. நுழைவு தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட ஒன்பது இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் நடத்த தேசிய தேர்வு முகமை முன்வர வேண்டும்.தினகரன் அறிக்கை:மத்திய அரசின் ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான பொது நுழைவு தேர்வு ஆங்கிலம் ஹிந்தி ஆகியவற்றோடு மாநில மொழிகளில் குஜராத்தியில் மட்டும் நடத்தப்படுகிறது.இது குறித்து சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை 'குஜராத் அரசு கேட்டுக் கொண்டதால் குஜராத் மொழியில் தேர்வு நடத்தப்படுகிறது. மற்ற மாநில அரசுகள் கோரிக்கை வைக்கவில்லை' என தெரிவித்துள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான கோரிக்கையை உடனடியாக பழனிசாமி அரசு தேசிய தேர்வு முகமையிடம் வைக்க வேண்டும். வரும் ஆண்டு முதலே தமிழ் வழியாக ஜே.இ.இ. நுழைவு தேர்வை தமிழக மாணவர்கள் தமிழில் எழுத ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X