பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு சைக்கிள் பரிசு ஆவடி புதிய ஆணையர் அசத்தல்

Added : நவ 09, 2019
Advertisement
 குழந்தைகளுக்கு சைக்கிள் பரிசு ஆவடி புதிய ஆணையர் அசத்தல்

ஆவடி:''ஒவ்வொரு வீட்டிலும், மக்கும் குப்பையை உரமாக்கினால், அந்த வீட்டில் உள்ள ஒரு குழந்தைக்கு, சைக்கிள் பரிசு வழங்கப்படும்,'' என, ஆவடி புதிய மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அறிவித்தார்.

ஆவடி, பருத்திப்பட்டு பசுமை பூங்காவில், மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.ஆவடி புதிய மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பேசியதாவது:

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், ஒவ்வொரு வீட்டிலும், மக்கும் குப்பையை உரமாக்க வேண்டும். மக்காத குப்பைகளை எங்களிடம் தந்து விடுங்கள்.இதை சிறப்பாக செய்யும் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு, 5,000 ரூபாய் மதிப்பிலான சைக்கிள், வாரம் தோறும் பரிசாக வழங்கப்படும்.அப்போது தான், குழந்தைகள், அவர்களது பெற்றோரை, வீட்டிலேயே குப்பையை உரமாக்க வேண்டும் என, தொல்லை செய்வர்.

இத்திட்டம், திருச்சியில் வெற்றி பெற்றது. அதையே, இங்கேயும் அமல்படுத்த விரும்புகிறேன். அதற்கு மக்களின் ஆதரவு தேவை.மழைநீர் கட்டமைப்பு, மாடிதோட்டம் அமைப்பது தொடர்பாக, விரைவில் ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்வோம்.மாடித்தோட்டம் வைத்திருப்பவர்கள், மாநகராட்சியின் துாதுவர்களாகஇருப்பர்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X