பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சியில் 63 ஏரிகள் நிரம்பின கரை உடைப்பு தடுக்க உத்தரவு

Added : நவ 09, 2019
Advertisement

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிரம்பியுள்ள, 63 ஏரிகளின் கரைகள் உடைக்கப்படுவதை தடுக்க, பொதுப்பணித்துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை பராமரிப்பில், 909 ஏரிகள் உள்ளன. வடகிழக்கு பருவ மழையால், இவற்றிற்கு நீராதாரம் கிடைக்கிறது. வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள, 63 ஏரிகள் முழுக் கொள்ளளவில் நிரம்பியுள்ளன. இவற்றில், மதுரமங்கலம் பழவனேரி, கூரம் சித்தேரி, பாண்டூர் ஏரி, தாம்பரம் பெரிய ஏரி, செம்பாக்கம் ஏரி, நன்மங்கலம் ஏரி, வெள்ளேரி தாங்கல் உள்ளிட்ட ஏரிகள் அடக்கம்.

சிறிய மழை பெய்தாலும், அவற்றில் இருந்து உபரிநீர் வெளியேறும் நிலையில் உள்ளன. இதுமட்டுமின்றி, 96 ஏரிகள், 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளன. அடுத்த மழைக்கு, அவை நிரம்பிவிடும் என, பொதுப்பணித்துறை கணித்துள்ளது. கடந்த காலங்களில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல ஏரிகள் நிரம்பிய போது, அவற்றின் கரைகளை உடைத்து, நீரை வெளியேற்றும் சம்பவங்கள் நடந்துள்ளன.

இம்முறை, குடிமராமத்து திட்டத்தின் வாயிலாக, பல ஏரிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. எனவே, அவற்றில் முழுக் கொள்ளளவிற்கு நீரை சேமிக்கவும், கரைகள் உடைக்கப்படுவதை தடுப்பதற்கும், பொதுப்பணித்துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X