சென்னை:
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள், பாதி வழியில் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
*சென்னை, கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு, இரவு, 8:01 மணி, 9:18 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து, சென்னை கடற்கரை நிலையத்துக்கு, இரவு, 10:15 மணி மற்றும், 11:10 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள், 11ம் தேதி, செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன
* கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு, அதிகாலை, 3:55 மணி, 4:35 மணி, 5:15 மணி, 5:50 மணி, காலை, 6:05 மணி, 6:43 மணி, மாலை, 5:18 மணி, இரவு, 8:01 மணி மற்றும் 9:18 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், 12ம் தேதியில் இருந்து, 15ம் தேதி வரை, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, ரத்து செய்யப்பட்டுள்ளன
* செங்கல்பட்டில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, அதிகாலை, 3:55 மணி, 4:35 மணி, 4:50 மணி, காலை, 6:40 மணி, 6:55 மணி, 8:40 மணி. மேலும், இரவு, 7:25 மணி, 10:15 மணி 11:10 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், 12ம் தேதியில் இருந்து, 15ம் தேதி வரை, செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.