சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் மோதி மளிகை கடை உரிமையாளர் பலி

Added : நவ 09, 2019
Advertisement

மேடவாக்கம்: மாநகர பஸ், இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில், மளிகை கடை உரிமையாளர் பலியானார்.

தாம்பரத்தை அடுத்த சந்தோஷபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 65; மளிகை கடை உரிமையாளர். நேற்று மதியம், மேடவாக்கம் சென்று, கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி, இருசக்கர வாகனத்தில் கடைக்கு திரும்பினார்.

தாம்பரம்- - வேளச்சேரி சாலை, ரங்கநாதன் நகர் அருகே சென்றபோது, பிராட்வேயில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மாநகர பஸ், இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது.இதில், படுகாயமடைந்தவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்து, மவுன்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரான பெரம்பூரைச் சேர்ந்த கோதண்டபாணி, 50, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X