அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓ.பி.எஸ்., அமெரிக்கா பயணம்

Added : நவ 09, 2019 | கருத்துகள் (11)
Advertisement
 ஓ.பி.எஸ்., அமெரிக்கா பயணம்

சென்னை : துணை முதல்வர் பன்னீர்செல்வம், பத்து நாட்கள் அரசு பயணமாக, நேற்று அமெரிக்கா சென்றார்.

அமெரிக்கா செல்வதற்காக, துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தார். அவருக்கு கட்சியினர் பூரண கும்ப மரியாதை கொடுத்தனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு, அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள், நிர்வாகிகள், பூங்கொத்து கொடுத்தும், மாலை அணிவித்தும், வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.அவர், காலை, 4:00 மணிக்கு, துபாய் சென்று, அங்கிருந்து அமெரிக்கா சென்றார். அவருடன், அவரது மனைவி, மகன் ரவீந்திரகுமார், நிதித்துறை செயலர் கிருஷ்ணன், துணை முதல்வரின் நேர்முக உதவியாளர் நாகராஜன் ஆகியோர் உடன் சென்றனர்.

அமெரிக்கா செல்லும் துணை முதல்வர், தமிழகத்தின் புதிய திட்டங்களுக்கு நிதிகள் பெறுவது; உலக வங்கியின் தெற்காசியப் பிரிவு உயர் அலுவலர்களை சந்திப்பது; வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்ந்த திட்டப் பணிகளை பார்வையிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளார்.முதல்வர் இ.பி.எஸ்., அமெரிக்கா சென்ற போது, கோட் - சூட் அணிந்தபடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். துணை முதல்வருக்கும் மூன்று செட், கோட் சூட் தயார் செய்துள்ளனர். அதை அணிவாரா அல்லது வேஷ்டி சட்டையில் இருப்பாரா என்ற எதிர்பார்ப்பு, அவரது ஆதரவாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.இன்று சிகாகோ நகரில், சிகாகோ தமிழ் சங்கம் நடத்தும், குழந்தைகள் தின நிகழ்ச்சியில், பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamil - Madurai,இந்தியா
10-நவ-201900:11:20 IST Report Abuse
thamil மக்கள் பணத்தில் சேவை செய்யும்போது ஊர் sutra கூடாதா ? அணைத்து நாடுகளுக்கும் சுற்றுலா செல்லும் டாடி, மேப்பில் நம்ம பாக்காத நாடே இருக்கக்கூடாது என மக்கள் சேவை செய்யும் போது, முன்னாள் முதல்வர்கள் வந்து சென்ற பின்பு நானும் ஊர் சுற்ற வந்தா என்ன ? மக்களுக்காக என் மக்களுக்காக
Rate this:
Share this comment
Cancel
thamil - Madurai,இந்தியா
10-நவ-201900:07:31 IST Report Abuse
thamil ae antha kurup pogumbothu intha gurup pogamattamaa
Rate this:
Share this comment
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
09-நவ-201912:13:17 IST Report Abuse
Sampathkumar Sampath அப்படியே அமெரிக்கா பொருளாதாரம் சரிவை நோக்கி போய்க்கொண்டிருப்பதை ஆராய்ந்த நம் துணை முதல்வர் டிரம்புக்கு வீதிக்கு 10 டாஸ்மாக் வைக்க ஆலோசனை வழங்கவும் உள்ளார். நேரண்டா வையாபுரி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X