எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

காஞ்சி கூட்டுறவு கடையில் ரூ.150 கோடி ஊழல்?

Added : நவ 09, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
காஞ்சி மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையின் கீழ், 400 ரேஷன் கடைகள், 5 பண்ணை பசுமை காய்கறிக் கடைகள், 3 பெட்ரோல் பங்க்குகள், 10 சிறிய அங்காடிகள் உள்ளன. இவற்றில், 960 பேர் பணிபுரிகின்றனர். இதில், சோப்பு, பெருங்காயம், டீ துாள் உட்பட மளிகை பொருட்கள், தரமற்ற முறையில் கொள்முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து, ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் கூறியதாவது: சோப்பு, டீ-துாள் என, 50க்கும்
காஞ்சிபுரம்,  கூட்டுறவு கடை, கமிஷன், ஊழல்,தரமற்ற முறை, புகார்

காஞ்சி மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையின் கீழ், 400 ரேஷன் கடைகள், 5 பண்ணை பசுமை காய்கறிக் கடைகள், 3 பெட்ரோல் பங்க்குகள், 10 சிறிய அங்காடிகள் உள்ளன. இவற்றில், 960 பேர் பணிபுரிகின்றனர். இதில், சோப்பு, பெருங்காயம், டீ துாள் உட்பட மளிகை பொருட்கள், தரமற்ற முறையில் கொள்முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் கூறியதாவது: சோப்பு, டீ-துாள் என, 50க்கும் மேற்பட்ட மளிகை பொருட்கள், வெளிச் சந்தையில் இருந்து, தரமற்றவையாக வாங்கப்பட்டு, நுகர்வோருக்கு ரேஷன் கடைகளில், கட்டாயமாக விற்கப்படுகின்றன. இதற்கு, பில் போடப்படுவதும் இல்லை. இதனால், லட்சக்கணக்கில் அதிகாரிகள் கமிஷன் அடிக்கின்றனர்.

இவற்றை கொள்முதல் செய்வதில், பதிவாளர் விதித்த உத்தரவுகள் பின்பற்றப்படாததுடன், ஊழியர்களுக்கு பணி ஆணை பிறப்பிப்பது, பணி மாற்றம் செய்வது துவங்கி நிர்வாகத்தின் அனைத்து முடிவுகளையும், ஓய்வு பெற்ற, தொழிற்சங்க நிர்வாகி ஒருவரும், தாம்பரம் சரக மேலாளருமே எடுத்து வருகின்றனர். இதனால், பணம் கொடுத்தே, ஊழியர்கள் அனைத்து பலன்களையும் பெற வேண்டி உள்ளது.

இதை அறிந்தும், மாவட்ட மேலாண் இயக்குனரும், பண்டக சாலையின் மாவட்ட தலைவரும், கண்டுகொள்ளாமல் உள்ளனர்.அதனால், நான்கு ஆண்டுகளில், 150 கோடி ரூபாய்க்கு மேல், நிர்வாகத்தில் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து, கூட்டுறவு சட்டப்பிரிவு, 81ன் படி, விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர்- -

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-நவ-201916:35:11 IST Report Abuse
ஆப்பு பெட்ரோல்ல கலப்படம் பண்ணியிர்க்காங்களா ஆய்வு செய்யுங்க.
Rate this:
Cancel
Thiyaga Rajan - Chennai,இந்தியா
09-நவ-201915:00:51 IST Report Abuse
Thiyaga Rajan Officers will definitely ask questions to the involved persons. But they ask about their % and not for the public benefit. This kind of actions were seen with the 99% of similar cases. People should question immediate to the purchase of those items in the rations. The quality of people in the Govt ofiicials getting worst 200% every year. There is no action to change the mentality of those people. Need to form the association to mentor the Govt officials to work in right way.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X