அதிபர் டிரம்புக்கு ரூ.14 கோடி அபராதம்

Updated : நவ 09, 2019 | Added : நவ 09, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
டிரம்பு,  ரூ.14 கோடி அபராதம்

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்:அறக்கட்டளை நிதியை, அரசியல் செலவுகளுக்கு பயன்படுத்தியதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, 14 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'டொனால்டு ஜே டிரம்ப் பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளையை நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளையின் நிதியில், 2016ல் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டதால், அறக்கட்டளை நிதியை, தன் அரசியல் செலவுகளுக்கு பயன்படுத்தியதாக, டிரம்ப் மீது புகார் கூறப்பட்டது.


latest tamil news




இது தொடர்பான வழக்கு, நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சேலியன் ஸ்கார்புலா அளித்த தீர்ப்பில் கூறியதாவது:அதிபர் டிரம்பின் அறக்கட்டளை, முன்னாள் ராணுவத்தினரின் நலனுக்கு நிதி திரட்டியுள்ளது. அந்த நிதியை, டிரம்ப், தன் தேர்தல் செலவுகளுக்கு முறைகேடாக பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அவருக்கு, 14 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அறக்கட்டளைகளை, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவதை தடுக்க வேண்டும்.

மேலும், டிரம்ப் செலுத்தும் அபராத தொகை, அவருக்கு தொடர்பில்லாத வேறு எட்டு அறக்கட்டளைகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு, நீதிபதி தீர்ப்பளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
09-நவ-201909:50:18 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே நம்ம ஊரு அரசியல்வியாதிகளுக்கு இதை தெரியப்படுத்துங்கள். இங்கே டிரஸ்ட் ஆரம்பிப்பதே அதை பல விதங்களில் பயன்படுத்த தான். இது தெரியாமல் இருக்கிறார்கள் அமெரிக்கர்கள். வாழ்க வளமுடன்.
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
09-நவ-201910:21:48 IST Report Abuse
KavikumarRamடிரஸ்ட் அல்ல முதலில் திருச்சபைகளின் பண நடவடிக்கையை கண்காணித்து நடவடிக்கை எடுத்தாலே இந்தியாவின் பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும்....
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
09-நவ-201909:34:55 IST Report Abuse
Arasu சரியான தீர்ப்பு ...ஆனால் 14 கோடி சின்ன தொகை தான்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
09-நவ-201907:20:33 IST Report Abuse
blocked user நம்ம ஊரில் எத்தனை அரசியல்வாதிகள் முன்னாள் இராணுவத்தினருக்கு நிதி கொடுத்தார்கள். அப்படி கொடுத்தவர்கள் வேண்டுமானால் டிரம்ப் பற்றி கருத்து அல்லது தீர்ப்பு சொல்லலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X