பொது செய்தி

தமிழ்நாடு

சிவகாசியில் 'பட்டம்' மெகா போட்டி

Added : நவ 09, 2019
Advertisement

சிவகாசி:தினமலர் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில் 'பதில் சொல் அமெரிக்கா செல்' என்ற வினாடி வினா போட்டி சிவகாசி காரனேசன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

மாணவர்களுக்கு சிறப்பான அடித்தளம் அமைத்து தரும் வகையில், தினமலர் நாளிதழ் 'பட்டம்' என்ற மாணவர்கள் பதிப்பை வெளியிடுகிறது. பொது அறிவை வளர்க்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு போத்தீஸ், வீனஸ் எலக்ட்ரானிக்ஸ், லோட்டே காபி பைட், குயின் மீரா
இன்டர்நேஷனல் பள்ளியுடன் இணைந்து வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது.

அதன்படி காரனேசன் பள்ளி மாணவிகளுக்கு நடந்த எழுத்து தேர்வில் 16 பேரை ஆசிரியர் குழுவினர் தேர்ந்தெடுத்தனர். இவர்கள் 8 குழுக்களாக பிரிந்து வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டனர். ஆசிரியைகள் வசந்தி, பரமேஸ்வரி, உமாராணி, பிச்சம்மாள், செல்வி நடத்தினர். 'எச்'பிரிவு மாணவிகள் பிரதீபா, பவானீஸ்வரி முதல் பரிசை பெற்றனர். பங்கேற்ற மாணவிகளுக்கு மெடல்கள், சான்றிதழ்களை பள்ளி செயலர் ஞானகிரிபாபு, பள்ளி தலைமைஆசிரியர் ஜெயந்தி வழங்கினர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X