பொது செய்தி

தமிழ்நாடு

குறைவான நீரிலும் செழிக்கும் கொய்யா! ஆண்டு முழுவதும் குறையாத வருவாய்

Added : நவ 09, 2019
Advertisement

மடத்துக்குளம்:ஆண்டு முழுவதும் சீரான வருவாய் கொடுக்கும் கொய்யா சாகுபடியை மேற்கொள்ள, மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.மடத்துக்குளம் ஆயக்கட்டு பகுதியிலுள்ள விளைநிலங்கள், அமராவதி அணையில் இருப்பு வைக்கும் பாசனநீரை நம்பியுள்ளன. ஆண்டுதோறும் பாசனநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதனால், சில பகுதியில் மாற்றுப்பயிராக பழ மரங்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.மைவாடி பகுதியில் பல ஏக்கர் பரப்பில் கொய்யா சாகுபடி நடந்துள்ளது. விவசாயிகள் கூறியதாவது:பழ மரங்கள் சாகுபடிக்கு தேவையான முறையில் விளைநிலத்தை தயார் செய்கிறோம். இதில், 10 அடிக்கு ஒரு செடி வீதம், ஒரு ஏக்கர் பரப்பில், 300 கொய்யா நாற்றுகள் நடவு செய்துபராமரிக்கிறோம்.இது சிறிய அளவில் வளர்ச்சி அடைந்தவுடன் பூவெடுக்கும் பருவத்தில், பூக்களை உதிர்த்து விடவேண்டும். அப்போது தான் மரம் நன்கு வளரும். முதல் மூன்று மாதங்கள் வரை நீர் பாசனம் செய்தால் போதும். குறைவான பாசன நீர் உள்ள இடங்களில் கொய்யா சிறந்த சாகுபடியாகும். கொய்யா செடி நடவு செய்த ஒரு ஆண்டில் பழங்கள் கொடுக்கும் அளவில் வளர்ந்து, உடனடியாக பறிக்க தொடங்கலாம். இரண்டு ஆண்டு கடந்த மரங்கள் அதிக பழங்கள் கொடுக்கும்.ஏப்., மே மற்றும் அக்., நவ., மாதங்கள் என ஆண்டுக்கு இரு சீசனில் பழங்கள் கொடுக்கும். ஆனாலும், மடத்துக்குளம் பகுதியிலுள்ள தட்ப வெப்பம், மண் வளம் சாகுபடிக்கு ஆதரவாக உள்ளதால், ஆண்டு முழுவதும் பழங்கள் காய்க்கிறது.கொய்யா பழம் அனைத்து தரப்பினரும் விரும்பி உண்பதால், சீரான வருவாய் கொடுக்கும் சாகுபடியாக உள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X