சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு கேமராக்கள் மாயம்: வனத்துறை விசாரணை

Added : நவ 09, 2019
Advertisement

ஆனைமலை:ஆனைமலை அடுத்த சர்க்கார்பதி வனப்பகுதியில், வனவிலங்குகளை கண்காணிக்க பொருத்தப்பட்ட, இரு கேமராக்களை மர்ம நபர்களை திருடிச் சென்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகம் முழுவதும், கோடை காலம் மற்றும் குளிர் காலம் என, ஆண்டுதோறும் இரு முறை வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கணக்கெடுப்பு முடிந்ததும், வனத்தினுள் கேமராக்கள் பொருத்தப்பட்டு, வனவிலங்குகள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.அதன்படி, ஜூன் மாதம் புலிகள் காப்பகத்தில் குளிர்கால கணக்கெடுப்பின் முடிவில், பல பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டன.இந்நிலையில், சர்க்கார்பதி வனப்பகுதி அருகே, ஆயிரங்கால் பீட் பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த, இரு கேமராக்கள் திருடப்பட்டது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் நேற்று முன்தினம், ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். காப்புக்காடு பகுதியில், அதிக ரோந்து செல்லும் பகுதியிலேயே, கேமராக்கள் திருடப்பட்ட சம்பவம், வனத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறை மற்றும் போலீசார் கேமராக்கள் திருடியவர்களை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X