பொது செய்தி

தமிழ்நாடு

மேம்பாலத்துக்கான இரும்பு 'கர்டர்' வந்தாச்சு! பணிகளை துவக்க ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

Added : நவ 09, 2019
Advertisement
 மேம்பாலத்துக்கான இரும்பு 'கர்டர்' வந்தாச்சு! பணிகளை துவக்க ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், நடைபாதை மேம்பாலம் கட்ட, இரும்பு 'கர்டர்'கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், பணிகள் துவக்காததால், பயணிகள் அதிருப்தியடைந்து உள்ளனர்.மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், டிக்கெட் கவுன்டர் இடத்திலிருந்து, தண்டவாளத்தை கடந்து ரயில்வே போலீஸ் ஸ்டேசன் அருகே, பிளாட்பாரத்தில் இறங்கும் வகையில், நடைபாதை மேம்பாலம் இருந்தது.கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், மின்சார ரயில்பாதை அமைக்கும் போது, நடைபாதை மேம்பாலத்தை அகற்றினர். அதன் பின் மேம்பாலம் கட்டவில்லை. பயணிகள் டிக்கெட் வாங்கிக் கொண்டு, ரயில்பாதைகளை கடந்து, பிளாட்பாரத்தில் நடந்து சென்று, நீலகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் மெமு பாசஞ்சர் ரயிலில் ஏறி வருகின்றனர். சில நேரங்களில் டிக்கெட் வாங்கிய பயணிகள், தண்டவாளங்களை கடந்து வருவதற்குள், ரயில்களை பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ரயிலை தவற விட்ட பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.மேட்டுப்பாளையத்தில் உள்ள பல்வேறு சமூக அமைப்பினர், ரயில் பயணிகள் ஆகியோர் நடைபாதை மேம்பாலம் அமைக்கும்படி, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து ஒரு கோடி ரூபாய் செலவில் நடைபாதை மேம்பாலம் கட்ட, ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கின.கான்கிரீட் பில்லர்கள் அமைத்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக பணிகள் முடிங்கி கிடந்தன.இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன், நடைபாதை மேம்பாலத்துக்கு தேவையான இரும்பு கர்டர்கள் கொண்டு வரப்பட்டு, மேட்டுப்பாளையம் ஸ்டேஷனில் வைத்துள்ளனர். ஆனாலும் பணிகள் துவங்க வில்லை.ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், மூன்று மீட்டர் அகலம், 74 மீட்டர் நீலத்தில், 6.8 மீட்டர் உயரத்தில் நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இன்னும் ஓரிரு வாரத்தில் பணிகள் துவங்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X