பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.எஸ்.குளம் சீரமைப்பு பணி தன்னார்வலர்களுக்கு அழைப்பு

Added : நவ 09, 2019
Advertisement

கோவில்பாளையம்:சர்க்கார் சாமக்குளத்தை சீரமைக்கும் பணி வரும், 11ம் தேதி பூமி பூஜையுடன் துவங்குகிறது.சர்க்கார் சாமக்குளம், 150 ஏக்கர் பரப்பளவு உள்ளது. கொண்டையம் பாளையத்தில் உள்ள இந்த குளத்தில் நீர் நிரம்பினால், எஸ்.எஸ்.குளம் வழியாக கவுசிகா நதி பள்ளத்தில் நீர் செல்லும்.சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். குடிநீர் தட்டுப்பாடு குறையும். கால்நடை வளர்ப்பு, விவசாய பரப்பு அதிகரிக்கும்.பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால், இந்த குளத்திற்கு, மழை நீர் வரும் பாதை, மண் மேடு, புதர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் அடைபட்டுள்ளது. எனவே, இக்குளத்தை துார்வாரி, நீர்வழித்தடத்தை சீரமைக்க, கோவில்பாளையம் நீர்நிலை பாதுகாப்பு அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பு சார்பில், குளம் துார்வாருதல், மழை நீர் வரும் பாதையை சீராக்குதல், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை வரும், 11ம் தேதி காலை 9:30 மணிக்கு குளத்தில் நடக்க உள்ளது.இப்பணியை சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள் தலைமையில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி துவக்கி வைக்கிறார். பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் ஜெயப்பிரகாஷ் பங்கேற்கிறார். இதில் தன்னார்வலர்கள் பங்கேற்று கரசேவைபுரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X