சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு  புகுந்து நகை திருட்டு:மர்ம நபருக்கு வலை

Added : நவ 09, 2019
Advertisement

கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டியில் வீடு புகுந்து நகை திருடி, தப்பியோடிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.கருமத்தம்பட்டி தீரன் சின்னமலை நகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 45; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் வெளியூர் சென்றார். மனைவி சுசீலா மட்டும் வீட்டில் இருந்தார். நள்ளிரவு வீட்டின் பின் பக்க கதவின் அருகே சத்தம் கேட்டுள்ளது.சுசீலா எழுந்து பார்த்தபோது, மர்ம நபர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வருவது கண்டு அதிர்ச்சியடைந்தார். தனது அறைக்குள் சென்று தாளிட்டு கொண்டு, அக்கம்பக்கத்தினருக்கு போன் செய்துள்ளார்.உள்ளே வந்த மர்ம நபர், பீரோவை உடைத்து, ஐந்து சவரன் நகையை எடுத்துக்கொண்டு, சுசீலா இருந்த அறையை உடைக்க முயன்றுள்ளார். அதற்குள் அக்கம்பக்கத்தினர் வரும் சத்தம் கேட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். தகவல் அறிந்த கருமத்தம்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.'கருமத்தம்பட்டி பகுதியில், கடைகள், வீடுகள் புகுந்து திருடுவது அதிகரித்துள்ளதால், போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X