ஐ தராபாத்: திருப்பதி ஆந்திராவில், கட்டுப்பாட்டை இழந்த 'கன்டெய்னர்' லாரி, கார், ஆட்டோ, பைக் ஆகியவற்றின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில், 11 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து, ஆந்தி ராவின் சித்தூர் நோக்கி, குடிநீர் 'பாட்டில்' ஏற்றப்பட்ட 'கன்டெய்னர்' லாரி, நேற்றிரவு வந்து கொண்டிருந்தது. சித்துார் மாவட்டத்திலுள்ள பலமனேர் அருகே, மொகிளி மலை பாதையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிர்திசையில் வந்துகொண்டிருந்த ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின் மீது மோதியது.இந்த விபத்தில், 11 பேர் பலியாகினர். இதில், பெரும்பாலானவர்கள் பெண்கள்.