பொது செய்தி

தமிழ்நாடு

புலி எலும்பு சூப்... எறும்பு தின்னி சாப்பிட அலைகின்றனர் சீனர்கள்!

Added : நவ 09, 2019
Advertisement
 புலி எலும்பு சூப்... எறும்பு தின்னி சாப்பிட அலைகின்றனர் சீனர்கள்!

வனங்களின் பசுமை சூழலில் மாற்றம் ஏற்படாமல் பாதுகாப்பது, உயிரினங்களின் உணவு சங்கிலி அறுபடாமல் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை திறம்பட செய்ய வேண்டியது, வனத்துறையின் கையில் உள்ளது.ஆனால், வனவேட்டையை தடுக்கவே முடியாது என்று சவால் விடுகிறார், முன்னாள் இந்திய வன உயிரின நிறுவன டீன் ஜான்சிங்.விலங்கு வேட்டையை தடுக்க முடியாது என கூற காரணம் என்ன?நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். இந்திய காடுகள் அரிய உயிரினங்களும், மூலிகைகளும் நிறைந்தவை. இதை பாதுகாக்கவில்லை என்றால், நமக்கு வாழ்க்கை இல்லை. இந்த காடுகளில் உள்ள உயிரினங்களை பாதுகாப்பது, சவாலான பணி. குறிப்பாக, வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க முடியாது.இதற்கு காரணம், சில முக்கியமான வன விலங்குகளின் உடல் பாகங்கள், பல நாடுகளின் கள்ளச் சந்தையில் விலை மதிப்பு உள்ள வணிகப் பொருட்களாக உள்ளன.எந்தெந்த மிருகங்கள் என கூற முடியுமா?நிறைய கூறலாம். காண்டாமிருகத்தின் கொம்பின் விலை, 80 லட்சம் ரூபாய். யானையின் தந்தம் வெள்ளை தங்கம் என மதிப்பிட்டு விற்கப்படுகிறது.புலிகளின் எலும்புகளுக்கு, எவ்வளவு விலை வேண்டுமானாலும்,கொடுத்து வாங்க சீனர்கள் தயாராக உள்ளனர்.அப்படியா... ஏன்?காரணம், புலியின் எலும்புகளை பவுடராக்கி, சூப்பில் கலந்து குடித்தால், தீராத நோய்களும் தீரும் என்ற மூடநம்பிக்கை, சீன மருத்துவத்தில் உள்ளது.அதுபோல், எறும்பு தின்னிஎன்ற பிராணிக்கும், அங்கு அதிகம் மதிப்பு உள்ளது. இப்படி இன்னும் பல சந்தை மதிப்பு உள்ள வன விலங்குகள் உள்ளன. இவற்றை வேட்டையாடும் சட்ட விரோத கும்பல்கள், உலகம் முழுவதும் உள்ளன.விலங்கு வேட்டையை தடுக்க என்னதான் வழி?வேட்டையை முழுமையாக தடுப்பது எளிய காரியமில்லை. அப்படி தடுக்க வேண்டும் என்றால், வன பாதுகாவலர்களால் மட்டும் முடியாது, போலீஸ், எல்லை பாதுகாவலர்கள், கடல் படையினர், ஏர்போர்ட் பாதுகாப்பில் இருப்பவர்கள் என, பலருடைய ஒத்துழைப்பும் தேவை. வனப்பணிகளில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வேட்டையை தடுப்பது, வன பாதுகாவலர்களால் மட்டும் முடியாது, போலீஸ், எல்லை பாதுகாவலர்கள், கடல் படையினர், ஏர்போர்ட் பாதுகாப்பில் இருப்பவர்கள் என, பலருடைய ஒத்துழைப்பும் தேவை. வனப்பணிகளில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.-ஜான்சிங் முன்னாள் டீன், இந்திய வன உயிரின நிறுவனம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X