ஜார்கண்ட்:ஹேமந்த் சோரன் முதல்வராக காங்.,ஆதரவு

Updated : நவ 09, 2019 | Added : நவ 09, 2019 | கருத்துகள் (5)
Advertisement

ராஞ்சி: விரைவில் நடைபெற உள்ள ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கான தேர்தலில் ஜே.எம்.எம் காங்., கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

இது குறித்து கூறப்படுவதாவது: ஜார்கண்ட் மாநில சட்டசபையின் ஆயுட்காலம் வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து சட்டசபைக்கான தேர்தல் ஐந்து கட்டங்களாக நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.






முதல்கட்டமாக நவ.,25, 2 ம் கட்டம் டிச.,2 , 3 ம் கட்டம் டிச.,9, 4 ம் கட்டம் டிச..,14, 5 ம் கட்டம் டிச.,20 ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவு டிச., 23 ல் வெளியிடப்பட உள்ளது. கடந்த 29-ம் தேதி முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் துவங்கி உள்ளது.

இந்நிலையில் மாநிலத்தில் அடுத்த ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஜே.எம்.எம். கட்சியும், காங்., உட்பட சில கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இது குறித்து காங்கிரஸின் மாநில பொறுப்பாளர் ஆர்.பி.என் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மொத்தம் உள்ள 81 இடங்களில் ஜே.எம்.எம்., கட்சி 43 இடங்களிலும் , ராஷ்டிரிய ஜனதா தளம் 7 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது. மேலும் முதல்வர் பதவியை ஜே.எம்.எம். கட்சிக்கு அளிப்பது என கூட்டணியில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணிக்கு ஹேமந்த் சோரன் தலைமை வகிப்பார். அவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார். என கூறினார்.





இவர்களின் கூட்டணியில் இடது சாரி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பாபுலால் மரான்டி தலைமையிலான ஜார்கண்ட் விகாஸ்கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

கடந்த தேர்தலின் போது பா.ஜ.,37 இடங்களிலும், ஜே.எம்.எம் 19 இடங்களிலும் , காங்கிரஸ் வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா
09-நவ-201913:23:52 IST Report Abuse
Ramshanmugam Iyappan பிஜேபி ஆட்சி தொடரும்....
Rate this:
Share this comment
Cancel
karthikeyanrajendran - pattukkottai,இந்தியா
09-நவ-201910:40:52 IST Report Abuse
karthikeyanrajendran எது எப்படியோ பிஜேபியை அங்கு ஆட்சி அமைக்க விடாமல் 10 தொகுதிகளுக்கு கீழ் பெறும்படி அவர்களை தோற்கடிக்க வைக்க வேண்டும் இல்லையென்றால் எம்எல்ஏக்களின் மீண்டும் ஆட்சி அமைக்க முற்படுவார்கள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி.
Rate this:
Share this comment
09-நவ-201911:44:47 IST Report Abuse
மும்பை நாநாபொறுத்து இருந்து பாருங்கள்...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
09-நவ-201908:21:38 IST Report Abuse
ஆரூர் ரங் வோட்டுக்கு நோட்டு புகழ் ஜே எம் எம் காங்கிரஸ் கூட்டு புதியதல்ல 1993லேயே காங்கிரஸ் மத்திய அரசுக்கு ஆதரவாக பார்லிமென்டில் வாக்களிக்க காங்கிரஸிடம் 1.02 கோடி வாங்கியதாக இதே ஜெ எம் எம் கட்சியின் ஷிபு சோரன் சூரஜ் மண்டல் சைமன் மொராண்டி மற்றும் சைலேந்திர மஹதோ தாங்களாகவே முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது மறக்காது .வாங்கிய பணம் ஜார்கண்ட் மக்கள் நலனுக்கானது எனக்கூறி எனப் பொய்ச்சொல்லி வருமான வரி விலக்கு கேட்டும் விண்ணப்பித்தனர் அந்நிய பரிதாபம். நிகழ்வு பார்லிமென்ட் சம்பந்தப்பட்டதல்ல சபாநாயகர்தான் முடிவெடுக்கமுடியும் தனக்கு அதிகாரமில்லை என கோர்ட் தீர்ப்பு சொல்லிவிட்டது .வழக்கம்போல ஊழல் வளர்ந்து அதேபோல திமுகவும் இப்போது கம்யூனிஸ்ட்களுக்கு 25கோடி கொடுத்துள்ளது ஊழலும் ஊழலும் சேருவது ஆச்சர்யமில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X