அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி பேட்டி: தலைவர்கள் ரியாக்ட்?

Updated : நவ 09, 2019 | Added : நவ 09, 2019 | கருத்துகள் (10)
Advertisement
ரஜினி பேட்டி, தலைவர்கள், ரியாக்ட்?

நேற்று நடிகர் ரஜினி பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, " என் மீது காவி வண்ணம் பூச நடைபெறும் முயற்சிக்கு, திருவள்ளுவரும் சிக்க மாட்டார், நானும் சிக்க மாட்டேன்.." என்று தடாலடியாக அறிவித்துள்ளார்


அவரது கருத்துரைக்கு தலைவர்கள் கருத்து வருமாறு


தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் : :தமிழக அரசியலில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை, ஸ்டாலின் நிரப்பி, நீண்ட நாட்களாகி விட்டன. ஆனால், அரசியலில் ரஜினி இருந்திருந்தால், இந்த உண்மை அவருக்கு தெரிந்திருக்கும். அவர் நீண்ட காலம் படப்பிடிப்பில் இருக்கும் காரணத்தால், தமிழகத்தின் தட்பவெப்ப நிலை அரசியல், அவருக்கு சரியாகப் புரியவில்லை. நேரடியாக, அவர் அரசியலுக்கு வந்தால், ஸ்டாலின் அந்த வெற்றிடத்தை நிரப்பி, நெடுநாட்கள் ஆகி விட்டதை, புரிந்து கொள்வார்.இவ்வாறு, அவர் கூறினார்.

பின், முரளிதர் ராவ் .பா.ஜ.,: நடிகர் ரஜினி, பா.ஜ.,வில் சேர உள்ளதாக, நாங்கள் ஒருபோதும் கூறவில்லை; அவரும் கூறவில்லை. உள்ளாட்சி தேர்தலுக்கு, பா.ஜ., தயாராகி வருகிறது. தமிழகத்தில், பா.ஜ.,வை கீழ்மட்ட அளவில் வலுப்படுத்த, உள்ளாட்சி தேர்தல் முக்கியமானது. பா.ஜ., தேசிய செயல் தலைவர் நட்டா, வரும், 12ம் தேதி சென்னை வருகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.

அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார்: ரஜினி தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டார். சில கட்சிகள் அவரை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்தன. இருந்தாலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்பமுடியாது.

அமைச்சர் உதயகுமார்: தமிழகத்தில் எந்த வெற்றிடமும் இல்லை. முதல்வர் பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். ஜனநாயக நாட்டில் யார்வேண்டுமானாலும் தங்களது கருத்தை சொல்லலாம். அதைத்தான் நடிகர் ரஜினி சொல்லியுள்ளார்.

பா.ஜ. மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் : பா..ஜ.வுடனான உறவு குறித்து நடிகர் ரஜினி தெளிவாக விளக்கமளித்து விட்டார்.
பொன்.ராதாகிருஷ்ணன்:ரஜினிக்கு காவி சாயம் பூச யாரும் முயற்சிக்கவில்லை..

தமிழருவி மணியன்:சாதி,மதங்களை கடந்த ரஜினிக்கு யாரும் மதச்சாயம் பூச முடியாது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
09-நவ-201922:47:26 IST Report Abuse
adalarasan Rajini அவர்கள் எதற்கும் லாயக்கில்லை, சினிமாவில் நடிப்பது தவற?அதுஉவும் இப்பா காலி? அனாவசியமாக இவர் எல்லாவற்றிக்கும் கருத்து சொல்கிறார்?தன்னைத்தானே விளம்பரப்படித்து கொள்ளா பத்திரிகைகள் புறக்கணிக்க வேண்டும்?தேர்தலில் நிற்க துப்பு இல்லை?தோற்றாலும், கமல், அவர்கள், தேர்தலையாவது சந்தித்தார்
Rate this:
Share this comment
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
09-நவ-201919:59:42 IST Report Abuse
s.rajagopalan மாநிலத்திலும் மத்தியில் உள்ள நிலைதான்......இங்கும் வெற்றிடம் இருக்கிறது....கருணாநிதியின் முட்டளவு கூட ஸ்டாலின் வரவில்லை. அ தி முக ....லாட்டரி டிக்கெட் கட்சி ......வெற்றி தோல்வி அவர்களுக்கே தெரியாது,... மாற்று கட்சியும் மாற்று தலைவரும் இங்கு தேவை.....ஆனால் ஒன்றும் தென் படவில்லையே ? மக்கலாட்சியில் யார் வேண்டுமானாலும் வகரலாம்தான் ....ஆனால் கண்டவனெல்லாம் நுழைந்து குழப்புகிறார்களே ?
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
09-நவ-201918:01:19 IST Report Abuse
vnatarajan ரஜினிக்கு வயதாகிவிட்டது அவர் 2021 ல் அரசியலுக்கு வரும் போது அவருக்கு கிட்டத்தட்ட வயது 72 ஆகிவிடும். அவர் சினிமாவில் அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பாரே ஒழிய கண்டிப்பாக வரமாட்டார். அப்படியே வந்தாலும் அவருடைய வங்கி கணக்கில் பணம் குறையுமெவொழிய ஆட்சியில் அமர முடியாது. NTR MGR ஜெஜெ எல்லாம் ஒரு கட்சியில் பொறுப்பான இடத்தில் யிருந்தபிறகே அரசியலில் வெற்றி கோடி நாட்டினார்கள். எந்த அரசியல் எக்ஸ்பீரியன்ஸ் இல்லாமல் புதியதாக கட்சியை ஏற்படுத்தி அவர் வெற்றி காண்பார் என்பது சந்தேகம்தான் சினிமாவில் வேண்டுமானால் உணர்ச்சி வசப்பட்டு பேசலாம், சண்டை போடலாம் மற்றும் ஆச்சி அமைக்கலாம் ஆனால் நிஜ வாழ்க்கையில் ப்ராக்டிகலாக நடத்திக்காட்ட அவரால் முடியாது. ஏனென்றால் அவருடைய nature அப்படி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X