பொது செய்தி

இந்தியா

இன்று கர்தார்பூர் சாலை திட்டம்: துவக்குகிறார் மோடி

Updated : நவ 09, 2019 | Added : நவ 09, 2019 | கருத்துகள் (6)
Advertisement
இன்று  கர்தார்பூர் சாலை,துவக்கம், மோடி

புதுடில்லி: வரலாற்று சிறப்பு வாய்ந்த கர்தார்பூர் சாலை திட்டத்தை, பிரதமர் மோடி, இன்று துவக்கி வைக்கிறார். சீக்கிய குருவான, குரு நானக்கின் நினைவிடம், அண்டை நாடான பாகிஸ்தானில் கர்தாபூரில் உள்ளது.

இங்கு, தர்பார் சாகிப் குருத்வாரா அமைந்துள்ளது. நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கிய பக்தர்கள், இங்கு செல்வதற்கு வசதியாக, இரு நாடுகளுக்கு இடையே, 4 கி.மீ., துாரத்துக்கு சாலை அமைக்கும் திட்டத்தை, இரு நாடுகளும் செயல்படுத்தி உள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் கர்தார்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.
பெரும் இடையூறு மற்றும் தடங்கல்களுக்கு இடையில் இந்த திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. பாக்., பிரதமர் இம்ரான் கான், கர்தார்பூரில் நடக்கும் விழாவில், இந்த சாலை திட்டத்தை இன்றுதுவக்கி வைக்கிறார்.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் இன்று நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, இத்திட்டத்தை, யாத்ரீகர்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். கர்தார்பூரில், சாலை துவங்கும் இடத்தில், யாத்ரீகர் வசதிக்காக, பிரமாண்டமாகவும், அதி நவீன வசதிகளுடனும், புறப்பாட்டு மையம் கட்டப்பட்டுள்ளது. இதையும், பிரதமர் மோடி, இன்று திறந்து வைக்கிறார். இதில், யாத்ரீகர், தற்காலிகமாக தங்குவதற்கான அறைகள், கழிப்பறை, குளியல் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளன.


Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
09-நவ-201908:34:40 IST Report Abuse
ரத்தினம் சொல்லி சொல்லி வாய் வலிக்கிறது, கேட்டு கேட்டு காது புளிக்கிறது, இருந்தாலும், சொல்லுவோம், எல்லா சிக்கல்களும் காந்தி மற்றும் நேரு கோஷ்டியின் கைங்கர்யங்கள்.
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
09-நவ-201912:24:40 IST Report Abuse
 Muruga Velஅந்த சிக்கல் இதில் அடங்காது.. அதான் உங்களுக்கு இருக்கும் சிக்கல் .....
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
09-நவ-201907:41:12 IST Report Abuse
GMM ஸ்ரீ குரு நானக் பிறப்பிடம் பிரிவினையின் போது இந்தியா, பஞ்சாப் மாநில எல்லையுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். சீக்கியர்கள் அமைதியான சூழலில் வழிபாடு செய்ய இது அவசியம். பாக். ஆப்கான் நம் அண்டை நாடு தான். நட்பு நாடு அல்ல. காங்கிரஸ் கட்சி பிரிவினையின் போது இதில் கவனம் செலுத்த வில்லை. சாலை திட்டம் திறந்த பின், இணைப்பு திட்டத்திற்கு பேச்சு வார்த்தையை துவக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
09-நவ-201907:35:03 IST Report Abuse
s.maria alphonse pandian இந்து-முஸ்லீம் என மனவேறுபாடுகள் இருந்தாலும் சீக்கியர்கள் என்னும் விஷயத்தில் இருவருமே ஒரே கோட்டில் இருப்பது மகிழ்ச்சியே...இந்த சாலை இரு நாடுகளின் அரசியல் இணைப்பு சாலையாகவும் இருக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Ramesh - Bangalore,இந்தியா
09-நவ-201909:28:44 IST Report Abuse
Ramesh@Maria : That is part of Game of Pakistan to issues through Sikhs - Khalistan etc as they have failed in Kashmir on 06.08.2019 which Pakistan was using for last 30+ years......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X