அயோத்தியில் உச்சக்கட்ட பாதுகாப்பு:

Updated : நவ 09, 2019 | Added : நவ 09, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று(நவ.,09) தீர்ப்பளிக்கிறது. இது தொடர்பான வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.தீர்ப்பு வெளியாக உள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால்
அயோத்தியில் உச்சக்கட்ட பாதுகாப்பு:

அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று(நவ.,09) தீர்ப்பளிக்கிறது. இது தொடர்பான வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.
தீர்ப்பு வெளியாக உள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


latest tamil newsகண்காணிப்பு பணியில் 'ட்ரோன்கள்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வாகனங்களில் செல்வோரை தீவிர பரிசோதனை செய்த பின்பே போலீசார் அனுப்பி வைக்கின்றனர். பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீசார் போக துணை ராணுவ படையினர் பயங்கரவாத தடுப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டப்பட்டுள்ள தற்காலிக ராமர் கோவிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்று வெளியாக உள்ள தீர்ப்பின் மூலம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது இன்று தெரியவரும்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-நவ-201908:52:36 IST Report Abuse
ஆப்பு அரசுக்கு வர்ர நிதியெல்லாம் உச்சக்கட்ட பாதுகாப்புக்காகவே செலவாயிட்டா? என்னத்த சொல்ல.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
09-நவ-201908:17:30 IST Report Abuse
GMM இந்துக்களிடம் மனித குலம் மேன்மை பெற ஆலயங்கள், புனித நூல்கள் இருந்தும் ஒருமைப்பாடு இல்லாமல், அந்நியர்கள் பல நூறு ஆண்டுகளாக குடியிருந்து, தன் கலாசாரம் பரப்பி, ஆட்சி செய்து மக்களை மதம் மாற்றி, பின் வெளியேறினார்கள். அந்நிய மதத்தை ஏற்ற மக்களை தன் வாழ்க்கையுடன், தன் நாட்டுடன் அவர்கள் ஏற்றுக்கொண்டது இல்லை. முன்னோர்கள் இந்துக்கள் என்பதால் இந்தியா ஏற்று கொண்டது. தெய்வ சக்தி வாய்ந்தவர் பிறந்த, அமரும், அருள் புரியும் இடம் புனிதமானது. மாற்ற முடியாது. வழிபாட்டிற்கு சிறந்தது என இந்தியர் அறிவர். தீர்ப்பின் மூலம் அயோத்தி நகர் புனிதம் அடையட்டும்.
Rate this:
Cancel
PRAVEEN - Bangalore,இந்தியா
09-நவ-201908:08:23 IST Report Abuse
PRAVEEN The disputed land and the surrounding empty land shall be shared by both religions equally to build Mosque and temple and shall live in harmony . There are places in India particularly in tamilnadu, where Mosque and Temple are built side by side and people from both religions are living happily without any issue.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X