பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.250 கோடியில் பாம்பனில் புதிய ரயில் பாலம் பூமி பூஜை

Added : நவ 09, 2019 | கருத்துகள் (6)
Advertisement

ராமேஸ்வரம்,:ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.250 கோடியில் இரட்டை வழித்தடத்துடன் புதிய ரயில் பால பணிகள் நேற்று பூமி பூஜையுடன் துவங்கியது.ஆங்கிலேயர்கள் காலத்தில் பாம்பன் கடலில் 1914ல் ரயில் பாலம் அமைக்கப்பட்டது. நுாற்றாண்டு கண்ட இப்பாலத்தின் துாக்கு பாலத்தில் 2018 டிசம்பரில் இரும்பு பிளேட் சேதம் அடைந்து 80 நாட்கள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து 250 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் அமைக்க மார்ச் 1 ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.பால பணிகளை துவக்க நேற்று காலை பாம்பன் மேற்கு கடற்கரையில் பூமி பூஜை நடந்தது. ரயில்வே கட்டுமான பிரிவு சென்னை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, தனியார் கட்டுமான நிறுவன மேலாளர் முகேஷ்குமார், பொறியாளர்கள் அன்பழகன், பாலமுருகன், ஒருங்கிணைப்பாளர் அப்துல் சமது உட்பட பலர் பங்கேற்றனர். குஜராத் நிறுவனம் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-நவ-201913:10:10 IST Report Abuse
பச்சையப்பன் மத சார்பற்ற நாட்டில் அரசாங்கம் கட்டும் பாலத்திற்கு இந்து முறைப்படி பூஜையா?? அதுவும் குஜராத் கம்பேனிக்கு காண்ட்ராக்ட்!!. வாழ்க அம்பானி!! வளர்க அத்தானி!!!
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
09-நவ-201909:37:58 IST Report Abuse
ரத்தினம் மதுரை எய்ம்ஸ் க்கு நில ஆர்ஜித வேலைகள் முடிந்தனவா? தமிழக அரசு தான் சீக்கிரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
09-நவ-201908:47:44 IST Report Abuse
Krishna Why Rameswaram Lay NEW Era Friendship BRIDGET ill Talai Mannar To Have Direct Cheap Rail Connectivity To Entire SriLanka
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X