பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரியில் ஆதரவின்றி தவித்த மூதாட்டி மீட்பு

Added : நவ 09, 2019
Advertisement

தர்மபுரி: தர்மபுரியில், ஆதரவின்றி தவித்து, உடல்நலம் குன்றிய மூதாட்டி மீட்கப்பட்டார். தர்மபுரி, நெசவாளர் காலனி மூன்றாவது தெருவை சேர்ந்த பெயின்டர் மாதேஸ்வரன், 55. இவரது தாய் ஈஸ்வரி, 85. இவர், சேலத்தில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். சேலத்தில் மகள் இறந்ததால், 15 நாட்களுக்கு முன் உறவினர்கள் மூலம், தர்மபுரியில் உள்ள மகன் மாதேஸ்வரன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். இந்நிலையில், மாதேஸ்வரன் தனது தாய் ஈஸ்வரிக்கு சரிவர உணவு வழங்காமல், வராண்டாவில் தங்க வைத்ததாக தெரிகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள், 1077ல் புகார் அளித்தனர். நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து நிருபர்கள் சார்பில், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தரப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மூதாட்டியை மீட்க, தர்மபுரி தாசில்தாருக்கு நேற்று மாலை உத்தரவிட்டது. தாசில்தார் சுகுமார் தலைமையிலான குழுவினர், மூதாட்டி ஈஸ்வரியை மீட்டு, அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். குணமானதும் அவரை, அழைத்து செல்ல மாதேஸ்வரன் ஒப்புக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X