ராமஜென்ம பூமியில் ராமர் கோயில்: தீர்ப்பு முழு விபரம்

Updated : நவ 09, 2019 | Added : நவ 09, 2019 | கருத்துகள் (135)
Advertisement

புதுடில்லி : அயோத்தி வழக்கில் சர்ச்சை நிலம் யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் சுப்ரீம் கோர் இன்று (நவ.,9) இறுதி தீர்ப்பு வழங்கி உள்ளது. ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட கோர்ட் அனுமதி அளித்தது.

ஷியா வாரியம் மற்றும் சன்னி வக்பு வாரியத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்பிற்கே சொந்தம் என்றும் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. பாபர் மசூதி என்று சொல்லி முஸ்லிம் அமைப்புகள் வைத்த வாதம் நிராகரிக்கப்பட்டது. ஷியா வாரியம் மற்றும் வக்பு சன்னி அமைப்பின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. முதலில் அந்த இடத்தில் ராமர் கோயில்தான் இருந்தது என இந்திய தொல்லியல் துறை நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு அளித்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டது.


தீர்ப்பு முழு விபரம் :


ஒரு மதத்தின் நம்பிக்கை மற்ற மதத்தின் நம்பிக்கையை தடுக்கும் விதமாக அமைய கூடாது. வரலாறு, மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது இந்த வழக்கு. மதசார்பின்மையே அரசியலமைப்பின் அடிப்படை பண்பு. பாபர் ஆட்சி காலத்தில் தான் மசூதி கட்டப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதே சமயம் பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு எந்த துல்லிய ஆதாரமும் இல்லை.

ஆதாரங்கள்: நீதிமன்றம் நடுநிலை காக்கும் நிலையில் உள்ளது. அமைதியை காக்கும் விதத்தில், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். நிலத்திற்கு உரிமை கோரிய ஷியா அமைப்பின் மனுவில் ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை. காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என தெரிய வந்துள்ளது. அந்த இடத்தில் முன்பே கட்டடம் ஒன்று இருந்துள்ளது. இந்திய தொல்லியல் துறை கொடுத்த ஆதாரங்கள் ஆராயப்பட்டுள்ளன.

மசூதி இருந்ததற்கு ஆதாரமில்லை : 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் அங்கு இருந்ததாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. 12 -16 ம் நூற்றாண்டிற்குள் சர்ச்சைக்குரிய இடத்தில் என்ன இருந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை. ராமர் நம்பிக்கை, விவாதம் மற்றும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டது.

சட்டத்தின் அடிப்படையில் தான் நிலத்திற்கு உரிமை கோரும் விவகாரத்தில் முடிவு செய்ய முடியும். ராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்ற ஹிந்துக்களின் நம்பிக்கையில் விவாதத்திற்கு உள்ளாக்க முடியாது. ஆவணங்களின்படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது. இந்த வழக்கில் தொல்லியல் துறையின் ஆதாரங்களை புறம் தள்ள முடியாது.

ஹிந்துக்களின் நம்பிக்கையை குலைக்க முடியாது. மத நம்பிக்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. மசூதியின் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய முறை கட்டடம் அல்ல. சர்ச்சைக்குரிய கட்டடம் இருந்த இடத்தில் ஹிந்துக்கள் வழிபாடு நடத்தியதற்கான ஆதாரம் உள்ளது. வரலாறு, மதம், சட்டம் என்பதை கடந்து அயோத்தி விவகாரத்தில் உண்மை பயணித்துள்ளது. நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோர முடியாது.

ஹிந்து அமைப்பிற்கே சொந்தம் : மசூதி கட்டுவதற்காக கோயில் இடிக்கப்பட்டது என தொல்லியல் துறை கூறவில்லை. சர்ச்சைக்குரிய நிலத்தின் முற்றத்தை ஹிந்துக்கள் தங்கள் வசம் வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே அயோத்தியில் ஹிந்துக்கள் ராமர் - சீதையை வணங்கியதற்கு ஆதாரம் உள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்திற்கு ஒட்டுமொத்தமாக சன்னி வக்பு வாரியம் உரிமை கோர முடியாது. பாபர் மசூதி இஸ்லாமிய முறையிலானது இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. நிர்மோகி அகார வழக்கு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல. பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புக்கள் நிரூபிக்கவில்லை. 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதம். சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறிய செயல்.

ராமர் கோயில் கட்ட அனுமதி : அலகாபாத் ஐகோர்ட், நிலத்தை 3 ஆக பிரித்துக் கொடுத்தது தவறு. இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக் கொள்ள மாற்று இடம் வழங்கப்பட வேண்டும். நிலத்திற்கு உரிமை கோரிய நிர்மோகி வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. நிலத்திற்கு உரிமை கோரும் ராம்லல்லாவின் மனு மட்டுமே ஏற்க கூடியது. அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் ராம்லல்லா அமைப்பிற்கே சொந்தம்.

இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும். அயேத்தியில் 2.77 ஏக்கர் நிலத்திற்கான உரிமை மத்திய அரசிடம் இருக்க வேண்டும். நிலத்தை பராமரிப்பது தொடர்பான திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும். நிலத்தை மூன்றாக பிரிக்கும் அலகாபாத் ஐகோர்ட்டின் உத்தரவு செல்லாது. சர்ச்சைக்குரிய இடத்தில் 3 மாதங்களில் கோயில் கட்ட மத்திய அரசு டிரஸ்ட் அமைக்க வேண்டும்.

அயோத்தி ராம்ஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. அயோத்தி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (135)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
k balakumaran - London,யுனைடெட் கிங்டம்
10-நவ-201904:40:41 IST Report Abuse
k balakumaran கோரி, கஜினி போன்றவர்கள் இந்து கோவில்களை இடித்ததுடன் கொள்ளையும் அடித்தனர். ஆனால், பாபர் முதல் கொண்டு அவுரங்கசீப் வரை இந்து கோவில்களை பிடிப்பதிலும், அதே இடத்தில் அதே கற்களை கொண்டு மசூதிகள் கட்டுவதிலும், இந்துக்களை வாள் முனையில் மதம் மாற்றுவதிலும் குறியாக இருந்தனர். கொடியவர்களை ஒழிக்க முடியாமல் இந்துக்கள் திண்டாடிய போது தான் மேற்கு நாட்டவர் வருகை இவர்களின் கொடும்கோல் ஆட்ச்சிகளை முடிவுக்கு கொண்டு வந்தது. வல்லவனுக்கு வல்லவன் என்றும் வையகத்தில் உண்டு. கொடி கட்டி ஆண்ட சுல்தான்கள் அட்ரஸ் இல்லாமல் போனது வரலாறு. அப்புறம் அப்பாவி இந்து காந்திஜி உடலில் இறை சக்தி சென்று விடுதலை பெற்று தந்ததும் வரலாறு. ஆனால், இடிக்கப்பட்ட புனித தலம்களில் மசூதிகள் நின்று கொண்டு இருக்கின்றன. இந்துக்களின் ஆட்ச்சி அமைந்த போதும் ஸ்ரீ ராமர் பிறந்த அயோத்தியில் அந்த மசூதி இருப்பதும் ஏற்க முடியாதது. ஆகவே, ஸ்ரீ ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியது வரலாற்று தவறு. அதை சரி செய்து நீதி நிலை நாட்டப்பட்டது மகிழ்ச்சிக்கு உரிய செய்தியே. மண்ணின் உத்தம புதல்வனுக்கு கோவில் கட்டுவதன் மூலம் மீண்டும் வரலாறு படைக்கும் இந்துஸ்தான். இதில் முஸல்மான் தரப்பு வருத்தப்பட ஏதும் இல்லை. வரலாற்று தவறுகள் சரி செய்யப்பட வேண்டியவை தான். பி[ஆகிஸ்தான் தனி முஸ்லீம் நாடு ஆக்குவோம் என்று இந்துக்கள், சீக்கியர், கிறிஸ்தவரை விரட்டி அடித்தகு உயிரை பறித்தது வரலாற்று தவறு. இன்று அதற்கு அந்த நாடு பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மதத்தின் முன்னுரிமை கொடுக்காமல் மனிதம் போற்ற பட்டால் இன்று அந்த நாடும் சுபீட்சம் ஆகி இருக்கும். சக மனிதனை மனிதன் ஆக பார்க்க பழகி கொண்டால் இந்தியா, பாகிஸ்தான் இடையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை இல்லை, இசுலாமிய மத தீவிரவாதிகளின் மிரட்டல்களுக்கு அஞ்ச வேண்டிய தேவையும் ஏற்படாது.
Rate this:
Share this comment
Cancel
Bala -  ( Posted via: Dinamalar Android App )
09-நவ-201923:08:40 IST Report Abuse
Bala Im waiting for UCC now. Come on Modiji.
Rate this:
Share this comment
Cancel
Charles - Burnaby,கனடா
09-நவ-201923:06:09 IST Report Abuse
Charles ஸ்ரீ ராமரின் வாழ்க்கைஒரு கதை இல்லை அது ஒரு ராஜகுமாரனின் நிஜ வாழ்க்கை. அதை மறை மறையாக தெரிந்துகொண்டோம் மற்றும் ஓலை சுவடிகள் மூலமாக முன்னோர்கள் எழுதியும் வைத்தார்கள். இலங்கைக்கு போடப்பட்ட கல்களால் ஆன அணை இன்றும் சாட்சியாய் இருக்கிறது. அயோத்தி இந்துக்களின் பரிசுத்த இடம் அதை அவர்களிடம் கொடுத்த உச்ச நீதி மன்றத்திற்கு நன்றி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X