அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரகசிய பொதுக்குழுவில் அசைவ விருந்து:அ.தி.மு.க., பாணியில் தி.மு.க., ஏற்பாடு

Added : நவ 10, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement
முப்பது ஆண்டுகளுக்கு பின், அ.தி.மு.க., பாணியில், தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னையில், இன்று அசைவ உணவு விருந்துடன், அமர்க்களமாக நடத்தப்படுகிறது.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் உள்ள உள்அரங்கத்தில் நடைபெறுகிறது. இதுவரை, அறிவாலயத்தில் நடந்து வந்த பொதுக்குழு கூட்டம், முதன் முறையாக, வெளியிடத்தில் நடைபெறுகிறது.
 ரகசிய பொதுக்குழுவில் அசைவ விருந்து:அ.தி.மு.க., பாணியில் தி.மு.க., ஏற்பாடு

முப்பது ஆண்டுகளுக்கு பின், அ.தி.மு.க., பாணியில், தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னையில், இன்று அசைவ உணவு விருந்துடன், அமர்க்களமாக நடத்தப்படுகிறது.
தி.மு.க., பொதுக்குழு கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் உள்ள உள்அரங்கத்தில் நடைபெறுகிறது. இதுவரை, அறிவாலயத்தில் நடந்து வந்த பொதுக்குழு கூட்டம், முதன் முறையாக, வெளியிடத்தில் நடைபெறுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக, அறிவாலயத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்த போது, அதில், பேசியவர்களின் பேச்சு, எல்.இ.டி., 'டிவி' வாயிலாக, வெளியே இருப்பவர்களுக்கு தெரிய வந்தது. இன்று நடக்கிற பொதுக்குழு கூட்டம், மிகவும் ரகசியமாக நடத்தப்படுகிறது.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க.,வில் இளைஞர் அணி, மகளிர் அணியை தவிர, இன்ஜினியர்கள் அணி, விவசாயிகள் அணி என, புதிய சில அணிகள் உருவாகி, மொத்தம், 18 அணிகள் உள்ளன. இந்த அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் அனைவரும், பொதுக்குழு உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை, தற்போது, 4,000 ஆக உயர்ந்துள்ளது. சிறப்பு அழைப்பாளர்களையும் சேர்த்து, மொத்தம், 4,400 பேர் பங்கேற்க உள்ளனர். தி.மு.க., பொதுக்குழு, தொண்டர்களின் மனசாட்சியாக கூடுகிறது என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதால், அங்கு, தங்கள் மனதில்பட்ட கருத்துகளை வெளிப்படுத்த, உறுப்பினர்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அதனால் தான், சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் அமைந்துள்ள உள்அரங்கத்தை தேர்வு செய்துள்ளனர். குறிப்பாக, இந்தப் பொதுக்குழு கூட்டம், 'சீக்ரெட்' கூட்டமாகவே முழுக்க நடத்தப்பட உள்ளது. அதனால் தான், அரங்கத்தின் உள்ளே என்ன பேசுகின்றனர் என்பதை, ஒளிபரப்ப அனுமதிக்கவில்லை. தென் சென்னை மாவட்ட செயலராக ஆர்.டி.சீதாபதி, டி.ஆர்.பாலு இருந்தபோது, தி.மு.க., பொதுக்குழுவில், அசைவ உணவு விருந்து அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பின், சென்னை மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலர் ஜெ.அன்பழகன் ஏற்பாட்டில், அசைவ உணவு விருந்துடன் நடத்துகிற, முதல் பொதுக்குழு கூட்டமாக, இந்தக் கூட்டம் அமைந்துள்ளது.
அ.தி.மு.க., பாணியில், மட்டன் பிரியாணி, சிக்கன், மீன் வறுவல், இறால் தொக்கு என, அசைவ விருந்துக்கு, தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவில், தீர்மானங்களை நிறைவேற்றிய பின், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், ஒன்றிய செயலர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர் போன்றோர், பதவிகளின் அடிப்படையில், பேச அனுமதிக்கப்படுவர். அதாவது, பேச விரும்புபவர்கள், முன்கூட்டியே, துண்டுச்சீட்டில் எழுதிக் கொடுக்க வேண்டும். அந்த வரிசை அடிப்படையில், பேச அழைக்கப்படுவர். உடல் நலமின்றி, வீட்டில் ஓய்வில் இருக்கும் பொதுச்செயலர் அன்பழகனை சந்தித்து, 'பொதுக்குழுவுக்கு வர முடியுமா' என, ஸ்டாலின் அழைத்து உள்ளார். அதற்கு, அன்பழகன், தன் வாழ்த்துகளை மட்டும் தெரிவித்துள்ளார். இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
12-நவ-201916:02:13 IST Report Abuse
Loganathaiyyan இப்படி புலால் விரும்பி சாப்பிடுபவர்கள் நான் அனுபவித்தது போல் ஒரு வேதனையை அனுபவித்தால் தானே திருந்தவர். இவர்களை ஆடு/கோழி அறுக்கும் இடத்தில் சென்று அவர்கள் ஆட்டை/கோழியை அறுப்பது, அதிலிருந்து வடியும் ரத்தம், அதன் துடிப்பு வலியால், அதன் பக்கத்தில் கட்டியிருக்கும் இன்னொரு ஆடு அதன் கயிற்றிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள துடிப்பது ............இப்படி பல காட்சிகளை சில நாட்கள் பார்த்துக்கொண்டே இருந்தால் அதுவும் ஹலால் முறை (அல்ல என்று சொல்லி மிக மிக மெதுவாக அறுத்தல்) (இன்னொரு முறை ஜட்கா முறை - இந்துக்கள் முறை) ஒருவன் பார்த்தால் அவன் ஒரு நல்ல மனிதனாக இருக்கும் பட்சத்தில் புலால் உண்பதை நிறுத்தியே தீருவான், இது உறுதி.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
12-நவ-201914:17:37 IST Report Abuse
Nathan உவ்வெ, பல பிராணிகளை தின்னும் இவர்களுக்கு நல்ல மனம் எப்படி வரும். எதை தின்னுகிறோமோ அப்படித்தான் மனம் ஆகும். அடித்து, உதைத்து, கிழித்து, சித்திர வதை பண்ணி தின்னுவோருக்கு கருணையாவது, நீதியாவது. தயிர்வடைதான் படைக்க லாயக்கு.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-நவ-201903:51:21 IST Report Abuse
J.V. Iyer சுற்று வட்டாரத்தில் ஒரு பிராணிகளைக்கூட காணவில்லையாம். கால்நடைகள் காணாமல் போய்விட்டனவாம். எங்கே போயிருக்கும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X