நான்கு முக்கிய வழக்குகளில் ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு

Updated : நவ 10, 2019 | Added : நவ 10, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, மேலும் நான்கு பரபரப்பான வழக்குகளில், ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு வழங்க உள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வரும், 17ல், பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின்
நான்கு,முக்கிய வழக்கு,ஒரு வாரத்திற்குள்,தீர்ப்பு,உச்ச நீதிமன்றம், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய்

புதுடில்லி: வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, மேலும் நான்கு பரபரப்பான வழக்குகளில், ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு வழங்க உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வரும், 17ல், பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் தீர்ப்பை, அவர் தலைமையிலான அமர்வு, நேற்று வழங்கியது. இதையடுத்து, ஓய்வு பெற இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மேலும் நான்கு முக்கிய வழக்குகளில், ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, வரும் வாரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டதில், ஊழல் நடைபெறவில்லை என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில், வரும் வாரம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.


latest tamil newsமேலும், 'காவலாளி திருடன்' என, மோடியை தேர்தல் பிரசாரத்தில் ராகுல் விமர்சித்ததற்கு எதிரான அவதுாறு வழக்கு, சபரிமலை கோவிலில் பெண்களுக்கு அனுமதி வழங்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கிலும், தீர்ப்பு வழங்கப்பட உள்ளன.

மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற டில்லி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலும், தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
10-நவ-201914:44:19 IST Report Abuse
spr எனது மூதாதையர்கள் விட்டுச் சென்ற வீட்டை இடித்து ஒருவர் அங்கு ஒரு பிராத்தனை தலமே காட்டினாலும் சட்டப்படி அது ஆக்கிரமிப்பே எனது வாரிசு தலையெடுத்த பின்னர் அந்த பிரார்த்தனை தளத்தை இடித்து எனது சொத்தை மீட்டால், இடித்தது குற்றம் சட்டப்படி நீதிமன்றம் போயிருக்க வேண்டும் என்று சொல்லலாமே தவிர,இடித்ததற்காக அவருக்கு நீதிமன்றம் தண்டனை தரலாம். அங்கு ஆக்கிரமிப்பு செய்தவரைக் கண்டிக்க வேண்டும். ஆனால் அந்த இடம் எனக்குச் சொந்தமில்லை என்று சொல்ல முடியாது அங்கு நான் மீண்டும் வீடு கட்டுவதனை ஆக்கிரமிப்பு செய்தவர் தடுக்க முடியாது. இது நாள் வரை முறைகேடாக அங்கு ஆக்கிரமிப்பு செய்தவர் தனது தவறுக்கு வருந்தி அந்த சொத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் மனமிருந்தால், மன்னிப்பும் கேட்கலாம் இங்கு ஒரு அன்பர் கருத்து வெளியிட்டது அந்த மனநிலை இல்லை என்பதனையும், விலை கொடுத்துக்கூட வாங்காமல், முறைகேடாக பிறர் சொத்தை அபகரித்ததோடல்லாமல் (கொள்ளையடித்தது) இதுநாள்வரை ஆண்டு அனுபவித்த தவறுக்காக வருந்தவும் விரும்பவில்லை என்பதனையும் காட்டுகிறது இதில் மத உணர்வுகளுக்கு இடமேயில்லை நியாயத்திற்கே மதிப்பளிக்க வேண்டும்
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
10-நவ-201913:12:00 IST Report Abuse
sankaranarayanan உச்ச நீதி மன்ற தீர்ப்பும் அமெரிக்காவின் இரட்டை கோபுரமும் - பெர்லின் சுவரும் ஒற்றுமைமைகள் உள்ளன 9/11 is a coincidence to Bharatam and America. How? Explanation:- 9th Month 11th date Twin Tower was destroyed in USA whereas 9th Day 11th Month Indian Supreme Court Verdict permitting to start construction of famous RAM MANDIR in Ayodhya within three months जय् श्रीराम् जय् श्रीराम् जय् श्रीराम् अयोध्या पुण्यनगरे श्रीरामस्य मन्दिरस्य निर्माणम्/ शिलाशासनं कर्तुं "भारतीय सर्वोच्च न्यायालयम्" अनुमति दत्तम् जय् श्रीराम् जय् श्रीराम् जय् श्रीराम् One more that Berlin Wall was removed on 9th November, 1989 ing the Gates to West Berlin, leading to German Reunification.
Rate this:
Cancel
badhrudeen - Madurai,இந்தியா
10-நவ-201912:06:54 IST Report Abuse
badhrudeen ராமர் கோவில் தீர்ப்பு மனிதனின் மனநிலையில் சரி இல்லாதது. மற்ற தீர்ப்புகளும் இதுபோல் தான் அமையும். இதில் சந்தேகம் இல்லை. வரும் தலை முறைகள் சட்டக்கல்வியை நன்றாக பயில வேண்டும். அரை குறையாக கற்றுக்கொண்டு நீதி மன்ற பணிக்கு வரக்கூடாது. ராமர் கோவில் நன்றாக கட்டிடம் கட்டி நிலைத்து நிற்க வாழ்த்துக்கள். மஸ்ஜித் கட்டுவதற்கு கொடுத்த ஐந்து ஏக்கர் நிலத்தை இந்தியா அரசாங்கமே வைத்துகொண்டு உலக அரங்கில் வல்லரசு நாடக வருவதுற்கு வாழ்த்துக்கள். ஒரு இந்தியனாக இருந்து மன வேதனையுடன் இதை பதிவு செய்கிறேன். ஏன் என்றால் என் தேசம் ஒரு ஜனநாயம் நாடு இதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X