நான்கு முக்கிய வழக்குகளில் ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு| Dinamalar

நான்கு முக்கிய வழக்குகளில் ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு

Updated : நவ 10, 2019 | Added : நவ 10, 2019 | கருத்துகள் (11) | |
புதுடில்லி: வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, மேலும் நான்கு பரபரப்பான வழக்குகளில், ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு வழங்க உள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வரும், 17ல், பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின்
நான்கு,முக்கிய வழக்கு,ஒரு வாரத்திற்குள்,தீர்ப்பு,உச்ச நீதிமன்றம், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய்

புதுடில்லி: வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, மேலும் நான்கு பரபரப்பான வழக்குகளில், ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு வழங்க உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வரும், 17ல், பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் தீர்ப்பை, அவர் தலைமையிலான அமர்வு, நேற்று வழங்கியது. இதையடுத்து, ஓய்வு பெற இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மேலும் நான்கு முக்கிய வழக்குகளில், ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, வரும் வாரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டதில், ஊழல் நடைபெறவில்லை என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில், வரும் வாரம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.


latest tamil news



மேலும், 'காவலாளி திருடன்' என, மோடியை தேர்தல் பிரசாரத்தில் ராகுல் விமர்சித்ததற்கு எதிரான அவதுாறு வழக்கு, சபரிமலை கோவிலில் பெண்களுக்கு அனுமதி வழங்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கிலும், தீர்ப்பு வழங்கப்பட உள்ளன.

மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற டில்லி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலும், தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X