வேட்டி,சட்டையில்,'மேல்கோட்':அமெரிக்காவில் ஓ.பி.எஸ்.,வலம்

Updated : நவ 10, 2019 | Added : நவ 10, 2019 | கருத்துகள் (62)
Advertisement
வேட்டி, சட்டையில், 'மேல்கோட்' : அமெரிக்கா ,ஓ.பி.எஸ்., வலம்

சென்னை,: பத்து நாள் அரசு பயணமாக அமெரிக்கா சென்று உள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வம், அங்கு குளிர் அதிகமாக இருப்பதால், வேட்டி, சட்டை மீது, மேல்கோட் அணிந்தபடி, நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், முதல் முறையாக வெளிநாடு சென்றுள்ளார். ௧௦ நாள் அரசு முறை பயணமாக, நேற்று முன்தினம் அதிகாலை, சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.


வரவேற்பு






சென்னை விமான நிலையத்தில், கட்சியினர் திரளாக பங்கேற்று, அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.அவருடன், அவரது மனைவி, மகன் ரவீந்திரகுமார், நிதித்துறை செயலர் கிருஷ்ணன், துணை முதல்வரின் நேர்முக உதவியாளர் நாகராஜன் ஆகியோர் சென்றனர். முதல்வர் இ.பி.எஸ்., அமெரிக்கா சென்ற போது, 'கோட் - சூட்' அணிந்தபடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். துணை முதல்வருக்கும், மூன்று செட், கோட் சூட் தயாரித்து எடுத்து சென்றனர்.





அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு சென்ற, துணை முதல்வரை, இந்திய துாதரக அதிகாரி சுதாகர்தலேலா, தமிழ் சங்க பிரதிநிதிகள், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். வேட்டி, சட்டையில் சென்ற பன்னீர்செல்வம், அங்கு குளிர் அதிகமாக இருப்பதால், வேட்டி, சட்டை மீது, மேல் கோட், கைகளில் கிளவுஸ் அணிந்தபடி, நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.


10 நாட்கள்


இந்திய அமெரிக்க டாக்டர்கள் சங்க தலைவர் ஷோபா ராமலிங்கம் தலைமையில் நடந்த, இரவு விருந்தில், அவர் பங்கேற்றார். இன்று சிகாகோ நகரில், சிகாகோ தமிழ் சங்கம் நடத்தும், குழந்தை கள் தின நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.அமெரிக்காவில், 10 நாள் தங்கும் துணை முதல்வர், தமிழகத்தின் புதிய திட்டங்களுக்கு நிதிகள் பெறுவது; உலக வங்கியின் தெற்காசியப் பிரிவு உயர் அலுவலர்களை சந்திப்பது; வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்ந்த திட்டப் பணிகளை பார்வையிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiyaga Rajan - Chennai,இந்தியா
15-நவ-201914:08:28 IST Report Abuse
Thiyaga Rajan What about Pollachi jayaraman Son's matter???
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
11-நவ-201919:30:21 IST Report Abuse
dandy பாவம் கோர்ட் ..சூட் அணிந்து இருந்தாலும் விமர்சனம் ..தமிழனாக வேஷ்டியுடன் போனாலும் விமர்சனம் ..என்னே டாஸ்மாக் மக்களின் பார்வை
Rate this:
Share this comment
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
11-நவ-201915:59:44 IST Report Abuse
Sampathkumar Sampath என்ன தலீவா டிரம்புக்கு பொருளாதாரத்தை எப்டி முன்னுக்கு இட்டாறதுன்னு கிளாஸ் (கிளாஸ்) எத்துக்கினியா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X