ஆர்.எஸ்.எஸ்.,தலைமையகத்தில் கொண்டாட்டம்

Added : நவ 10, 2019 | கருத்துகள் (1) | |
Advertisement
நாக்பூர்: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று, ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில், அந்த அமைப்பினரும், பா.ஜ., தொண்டர்களும், நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 'அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம்' என, உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதை வரவேற்று, ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள, மஹாராஷ்டிரா மாநிலம்,

நாக்பூர்: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று, ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில், அந்த அமைப்பினரும், பா.ஜ., தொண்டர்களும், நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

'அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம்' என, உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதை வரவேற்று, ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள, மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், கொண்டாட்டம் களைகட்டியது.
ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அருகே உள்ள கோவிலில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரும், பா.ஜ., தொண்டர்களும் ஏராளமாக திரண்டனர். அங்கு, ஆரத்தி ஏற்றி வழிபாடு நடத்திய அவர்கள், 'ஜெய் ஸ்ரீராம்' என, கோஷம் எழுப்பினர்.
ஆர்.எஸ்.எஸ்., செய்தி தொடர்பாளர் சந்தன் கோஸ்வாமி கூறுகையில்,''பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரை தான், அயோத்தி விஷயத்தில் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது கிடைத்துள்ள தீர்ப்புக்கு, அத்வானி தான் காரணம்,'' என்றார்.



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.chandrasekaran - channai,இந்தியா
10-நவ-201910:05:08 IST Report Abuse
r.chandrasekaran ஜெய் ஸ்ரீ ராம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X