நாக்பூர்: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று, ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில், அந்த அமைப்பினரும், பா.ஜ., தொண்டர்களும், நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
'அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம்' என, உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதை வரவேற்று, ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள, மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், கொண்டாட்டம் களைகட்டியது.
ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அருகே உள்ள கோவிலில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரும், பா.ஜ., தொண்டர்களும் ஏராளமாக திரண்டனர். அங்கு, ஆரத்தி ஏற்றி வழிபாடு நடத்திய அவர்கள், 'ஜெய் ஸ்ரீராம்' என, கோஷம் எழுப்பினர்.
ஆர்.எஸ்.எஸ்., செய்தி தொடர்பாளர் சந்தன் கோஸ்வாமி கூறுகையில்,''பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரை தான், அயோத்தி விஷயத்தில் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது கிடைத்துள்ள தீர்ப்புக்கு, அத்வானி தான் காரணம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE