சிவசேனா வியூகம்: ராவத் பதில்

Updated : நவ 10, 2019 | Added : நவ 10, 2019 | கருத்துகள் (26)
Advertisement
மஹாராஷ்டிரா, சிவசேனா, பா.ஜ., பாஜ, பட்னவிஸ்,  கவர்னர், சஞ்சய் ராவத்

இந்த செய்தியை கேட்க

மும்பை: மஹாராஷ்டிராவில் யாரும் ஆட்சி அமைக்காவிட்டால் , எங்களின் வியூகத்தை அறிவிப்போம் என சிவசேனா கூறியுள்ளது.

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பா.ஜ., சிவசேனா இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி மற்றும் ஆட்சியில் சம பங்கு அளிக்க வேண்டும் என சிவசேனா உறுதியாக உள்ளது. இந்நிலையில் மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு பா.ஜ.,வுக்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில், அதிக தொகுதிகளில் வென்ற கட்சி என்ற வகையில், முதல்வர் பட்னவிஸ் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
மகாராஷ்ட்ராவில் பா.ஜ., சிவசேனா இடையிலான முதல்வர் பதவிச் சண்டை தீராத நிலையில், அதிக இடங்களைப் பிடித்த பா.ஜ.வை ஆட்சி அமைக்க கவர்னர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். ஆனால், ஆட்சியமைக்க பா.ஜ. இன்னும் உரிமை கோரவில்லை. பா.ஜ.வின் பலம் 105தான். மெஜாரிட்டிக்கு 40 சீட் குறைவு.


இது தொடர்பாக சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் கூறுகையில், பா.ஜ.,வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த முடிவு வரவேற்கத்தக்கது. கவர்னர் முடிவால், மாநிலத்தில் புது ஆட்சி அமைய உள்ளது. அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற முறையில் பா.ஜ.,வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மெஜாரிட்டி உள்ளது என கருதினால், தேர்தல் முடிவு அறிவித்த 24 மணி நேரத்தில் ஏன் அக்கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை என்பது புரியவில்லை. மாநிலத்தில் யாரும் ஆட்சி அமைக்காத போது, எங்களின் வியூகத்தை அறிவிப்போம் எனக்கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருண் பிரகாஷ், சென்னை மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியே வர வேண்டும்..நினைவு உள்ளதா???
Rate this:
Share this comment
Cancel
Venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-நவ-201918:43:23 IST Report Abuse
Venkat Senaites, Now form government with help of NCP/Congress. Is this what you expected? God Bless Mumbai, Maharashtra, India
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
10-நவ-201916:38:35 IST Report Abuse
தாண்டவக்கோன் dangerous for the federal tem in India
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X