சுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் பணம்

Updated : நவ 10, 2019 | Added : நவ 10, 2019 | கருத்துகள் (23)
Advertisement
சுவிஸ், சுவிட்சர்லாந்து அரசு,  பணம், வங்கிக்கணக்கு,

இந்த செய்தியை கேட்க

ஜூரிச்: சுவிஸ் வங்கிகளில், செயல்பாடற்று கிடக்கும் இந்தியர்களின் கணக்குகளில் உள்ள பணத்திற்கு உரிமை கோர யாரும் முன் வரவில்லை. இதனையடுத்து அந்த பணம் சுவிஸ் அரசுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த டிச.,2015ல் சுவிட்சர்லாந்து வங்கிகளில் செயல்பாடற்று கிடக்கும் 2,600 வங்கிகணக்குகள் குறித்த விவரங்களை சுவிஸ் அரசு வெளியிட்டது. இந்த கணக்குகளில், கடந்த 1955 முதல் தற்போது வரை ரூ.300 கோடி( இந்திய மதிப்பில்) பணம் உரிமை கோரப்படாமல் உள்ளது. உரிமையாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெற்று கொள்ள முடியும் என்பதற்காக அதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டன. சுவிஸ் அரசு வெளியிட்ட வங்கி கணக்குகளில் 10 இந்தியர்களின் வங்கி கணக்குகளும் அடக்கம்.




சுவிட்சர்லாந்து வங்கிகளில் 2,600 கணக்குகள் செயல்படாமல் இருப்பதாக, 2015ம் ஆண்டில் சுவிஸ் அரசு, அறிவிப்பு வெளியிட்டது. அந்த கணக்குகளில், 1955 முதல் தற்போது வரை 300 கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் உள்ளது. உரிமையாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள வசதியாக கணக்கு விவரங்கள் வெளியிடப்பட்டன.


சுவிஸ் அதிகாரிகளின் தகவல்கள் படி, சுவிஸ் அரசு வெளியிட்ட வங்கி கணக்குகளில், இந்தியர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த நாட்டினரின் வங்கிக்கணக்குகளும் அடக்கம். ஆனால், கடந்த 6 ஆண்டுகளில், எந்த இந்தியர்களும், செயல்பாடற்ற கிடக்கும் வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்தை திருப்பி வாங்கியது இல்லை. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களின் செயல்பாடற்ற வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை சிலர் உரிமை கோரி திரும்ப பெற்றுள்ளனர். சுவிஸ் உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்தவர்களும் பணத்தை திரும்ப பெற்றுள்ளனர்.

வங்கிகளில் செயல்பாடற்று கிடக்கும் கணக்குகளில் உள்ள பணத்தை உரிமை கோருவதற்கான அவகாசம், சில வங்கிக்கணக்குகளுக்கு அடுத்த மாதம் முடிவு பெறுகிறது. சில வங்கிக்கணக்குகளுக்கு 2020 வரை அவகாசம் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi -  ( Posted via: Dinamalar Android App )
10-நவ-201923:31:12 IST Report Abuse
Ravi ம்ஹூம்.... ஸ்விஸ் பேங்கில் இருந்து.. கருப்பு பணத்தை எடுத்து வருவாங்க னு பார்த்தால்.. இங்கே உள்ள ரிசர்வ் பேங்கில் இருந்து வெள்ளை பணத்தை எடுக்குறாங்க... போங்க... போய் ஸ்விஸ் பேங்கில் இருந்து எடுத்து வாங்க
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
10-நவ-201922:28:49 IST Report Abuse
Anandan ஒருத்தர் ஆட்சிக்கு வந்ததும் ஸ்விஸ் வாங்கியில் உள்ள இந்தியர்களின் பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவேன் என்று சொன்னார், ஆட்சிக்கும் வந்தார், ஆட்சி முடிந்தது, இன்னொரு முறையும் ஆட்சிக்கு வந்தார், இன்னும் பணம் மட்டும் வரவில்லை, ஆனால் முட்டுகுடுப்பவர்கள் மட்டும் தீவிரமாக முட்டுகுடுக்கிறார்கள் அப்போ யார்தான் இதையெல்லாம் கேட்பது, கேள்வி கேட்டால் பச்சை, பாவாடை, தேஷ்பக்தி இல்லாதவன் அப்படி இப்படினு பகடியாம் பேசுவதே வேலையாய் வைத்துள்ள வீணர்களால் நாடு வீணாய் போகிறது.
Rate this:
Share this comment
Cancel
10-நவ-201918:13:38 IST Report Abuse
ஆப்பு இதெல்லாம் பிஸ்கோத்து காசு. 150 லட்சம் கோடியை எப்பவோ தடச்சி எடுத்துக்கிட்டு போயிட்டாங்க. இங்கே இருக்குறவங்களைத்தான் நாயா அலையவுட்டாங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X