சுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் பணம்| No claimants for dormant Swiss accounts of Indians; some may get liquidated soon | Dinamalar

சுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் பணம்

Updated : நவ 10, 2019 | Added : நவ 10, 2019 | கருத்துகள் (23) | |
ஜூரிச்: சுவிஸ் வங்கிகளில், செயல்பாடற்று கிடக்கும் இந்தியர்களின் கணக்குகளில் உள்ள பணத்திற்கு உரிமை கோர யாரும் முன் வரவில்லை. இதனையடுத்து அந்த பணம் சுவிஸ் அரசுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த டிச.,2015ல் சுவிட்சர்லாந்து வங்கிகளில் செயல்பாடற்று கிடக்கும் 2,600 வங்கிகணக்குகள் குறித்த விவரங்களை சுவிஸ் அரசு வெளியிட்டது. இந்த கணக்குகளில், கடந்த 1955 முதல் தற்போது வரை ரூ.300
சுவிஸ், சுவிட்சர்லாந்து அரசு,  பணம், வங்கிக்கணக்கு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜூரிச்: சுவிஸ் வங்கிகளில், செயல்பாடற்று கிடக்கும் இந்தியர்களின் கணக்குகளில் உள்ள பணத்திற்கு உரிமை கோர யாரும் முன் வரவில்லை. இதனையடுத்து அந்த பணம் சுவிஸ் அரசுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த டிச.,2015ல் சுவிட்சர்லாந்து வங்கிகளில் செயல்பாடற்று கிடக்கும் 2,600 வங்கிகணக்குகள் குறித்த விவரங்களை சுவிஸ் அரசு வெளியிட்டது. இந்த கணக்குகளில், கடந்த 1955 முதல் தற்போது வரை ரூ.300 கோடி( இந்திய மதிப்பில்) பணம் உரிமை கோரப்படாமல் உள்ளது. உரிமையாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெற்று கொள்ள முடியும் என்பதற்காக அதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டன. சுவிஸ் அரசு வெளியிட்ட வங்கி கணக்குகளில் 10 இந்தியர்களின் வங்கி கணக்குகளும் அடக்கம்.


latest tamil newsசுவிஸ் அதிகாரிகளின் தகவல்கள் படி, சுவிஸ் அரசு வெளியிட்ட வங்கி கணக்குகளில், இந்தியர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த நாட்டினரின் வங்கிக்கணக்குகளும் அடக்கம். ஆனால், கடந்த 6 ஆண்டுகளில், எந்த இந்தியர்களும், செயல்பாடற்ற கிடக்கும் வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்தை திருப்பி வாங்கியது இல்லை. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களின் செயல்பாடற்ற வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை சிலர் உரிமை கோரி திரும்ப பெற்றுள்ளனர். சுவிஸ் உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்தவர்களும் பணத்தை திரும்ப பெற்றுள்ளனர்.

வங்கிகளில் செயல்பாடற்று கிடக்கும் கணக்குகளில் உள்ள பணத்தை உரிமை கோருவதற்கான அவகாசம், சில வங்கிக்கணக்குகளுக்கு அடுத்த மாதம் முடிவு பெறுகிறது. சில வங்கிக்கணக்குகளுக்கு 2020 வரை அவகாசம் உள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X