இந்த செய்தியை கேட்க
வாஷிங்டன்: எச்1பி விசா வைத்திருப்பவர்ளின் மனைவி மற்றும் கணவர், அமெரிக்காவில் பணிபுரிவதற்கு தடை விதிக்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு, அந்த நாட்டு அரசு, 'எச் - 1 பி' விசா வழங்கி வருகிறது. இந்த விசா வைத்திருப்போரின் வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளுக்கு எச்-4 விசா வழங்கப்படுகிறது.

இந்நிலையில், எச்-1பி விசா வைத்திருப்போரின் மனைவி அல்லது கணவர் அமெரிக்காவில் பணிபுரிய ஒபாமா ஆட்சி காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஏராளமான இந்தியர்கள் பலன் அடைந்தனர். இந்த உத்தரவை எதிர்த்து. சேவ்ஸ் ஜாப்ஸ் யுஎஸ்ஏ என்ற அமைப்பு உள்ளிட்ட பலர். கொலம்பியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு டிரம்ப் நிர்வாகமும் ஆதரவு அளித்தது. எச்-4 விசா வைத்திருப்போருக்குபணி அனுமதி வழங்கப்பட்டதால், தங்களது வேலை பறிபோனதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம், வழக்கை, கிழமை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த வழக்கை, முதல் நிகழ்வில் இருந்து முழுமையாக விசாரித்து பின்னர் இறுதியாக முடிவெடுக்க வேண்டும். இதற்கு மனுவை திருப்பி அனுப்புவதே சிறந்தது என 3 நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதி ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE