மஹா., வில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு கவர்னர் அழைப்பு

Updated : நவ 10, 2019 | Added : நவ 10, 2019 | கருத்துகள் (15)
Advertisement

மும்பை : மஹா.,வில் ஆட்சி அமைக்க வருமாறு சிவசேனாவுக்கு கவர்னர் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார்.


மஹாராஷ்டிரா சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், பா.ஜ., 105 தொகுதிகளிலும், சிவசேனா, 56 இடங்களிலும் வென்றன. பெரும்பான்மைக்கு, 145 பேரின் ஆதரவு தேவை. ஆனால் மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பா.ஜ., சிவசேனா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை ஏதும் இல்லாத நிலையில், தேர்தலில், அதிக இடங்களை பெற்ற தனிக்கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க வரும்படி பட்னாவிஸ்க்கு அம்மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருந்தார். ஆட்சியமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க பட்னாவிஸக்கு நவ., 11 வரை காலக்கெடு விதித்திருந்தார். இது தொடர்பாக பட்னவிஸ் வீட்டில் ஆலோசனை நடந்தது. அதனை தொடர்ந்து மஹா.,வில் ஆட்சியமைக்க போவதில்லை என்று பட்னாவிஸ் மறுத்து விட்டார்.

மஹா.,வில் பா.ஜ ஆட்சி அமைக்க மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, மாநிலத்தின் 2வது தனிப்பெரும் கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் கோஷ்யாரி இன்று (நவ.,10) அழைப்பு விடுத்துள்ளார். ஆட்சி அமைப்பது குறித்து உரிய முடிவையும் விருப்பத்தையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதேநேரத்தில் இது குறித்து நாளை ( 11 ம் தேதி) மாலை 7 மணிக்குள் முடிவு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

56 இடங்களை கொண்ட சிவசேனா மஹா.,வில் ஆட்சி அமைத்தால் பெரும்பான்மையை நிரூபிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
11-நவ-201916:45:13 IST Report Abuse
A.George Alphonse வெகு சீக்கிரமே உத்தம் தாக்ரே will meet the same Fate of Kumara swamy of Karnataka State if he or his son becomes CM of Maharashtra.
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
11-நவ-201900:29:57 IST Report Abuse
Allah Daniel பிஜேபி யின் அருமையான முடிவு...பட்னாவிஸ், கர்நாடகாவின் எடியூரப்பா போல எந்த கோமாளி தனமும் செய்யாமல், பின்வாங்கியது வரவேற்கத்தக்கது...
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
11-நவ-201900:28:35 IST Report Abuse
LAX சிவசேனா - இப்ப என்ன.. செய்வீங்க..? ஹ.. இப்ப என்ன செய்வீங்க..? முட்டு குடுக்கறவங்களுக்கே இவ்ளோ னா.. முழுசா இருக்கறவங்களுக்கு (கொஞ்சம் கம்மியா போனதால தான்) எவ்ளோ இருக்கும்..?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X