பொது செய்தி

இந்தியா

மசூதி இடம்: முஸ்லிம் வாரியம் விரைவில் முடிவு

Updated : நவ 10, 2019 | Added : நவ 10, 2019 | கருத்துகள் (30)
Advertisement

அயோத்தி: அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான இடத்தை பெறுவது தொடர்பாக விரைவில் நடக்க உள்ள வக்பு வாரிய கூட்டத்தில் முடிவு செய்வோம் என சன்னி வக்பு வாரிய தலைவர் ஜுபர் பரூகி தெரிவித்தார்.






அயோத்தி வழக்கில் சர்ச்சையில் இருந்து வந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து முஸ்லிம்கள் மசூதி கட்ட அயோத்தியில் 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கப்படும் என்றும் தீர்ப்பளித்தது.





இந்நிலையில், சன்னி வக்பு வாரிய தலைவர் ஜுபர் பரூகி அளித்த பேட்டியில்:
'உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளபடி 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று வரும் நவ. 26ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பினை மதிக்கிறோம். பலரும் உச்சநீதிமன்ற தீர்ப்பினை ஏற்க கூடாது என்று தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் எண்ணம் இல்லை. எதிர்மறையான எண்ணங்களை நேர்மறையான எண்ணங்கள் வெல்லும்' இவ்வாறு பரூகி தெரிவித்தார்

முன்னதாக கூட்டம் நவ.13 ம் தேதி நடைபெற இருந்த நிலையில் அது தற்போது 26ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
11-நவ-201915:06:28 IST Report Abuse
Balaji இருதரப்பினரும் மேலும் இதை பெரிதுபடுத்தப்படாமல் இருந்தால் நல்லது......
Rate this:
Share this comment
Cancel
11-நவ-201913:42:28 IST Report Abuse
அருணா கோர்ட் அனுமதி தந்த நிலத்தை பெற்றுக் கொள்ளட்டும் விருப்பம் இருந்தால். உரிமை என்ற வாரத்தை எதற்கு.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
11-நவ-201912:43:20 IST Report Abuse
oce டாக்டர் முல்லர் என்பவர் கி.மு 1500ல் மங்கோலியர் சிந்து சமவெளிக்குள் நுழைந்ததாக கூறுகிறார். அங்கிருந்த சிந்து சமவெளி கலாச்சாரத்தை அவர்கள் வேறு விதமாக மாற்றியதாகவும் கூறுகிறார். அவர் கூற்றின் படி அவர்கள் சிந்து தமிழர் கலாச்சாரத்தை உள்வாங்கி ஆரியர் என்ற அடையாள பெயர் வைத்துக் கொண்டதாக கருத இடமேற்படுகிறது. அவர்கள் அங்கு காலடி வைக்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்து நாகரிகம் அங்கு செழிப்புற்று இருந்துள்ளது என டாக்டர் அலெக்சாண்டர் கன்னிங் ஹாம் கூறுகிறார். பண்டைய துவாரகை அரபிக் கடலில் மூழ்கிய பின் அதில் எஞ்சிய கடைசி நகரத்தை டாக்டர் லாரல் கன்னிங் ஹாம் போட்டோ எடுத்தததாகவும் அது மேலை நாட்டு நகர பாணியில் இருந்ததாகவும் அவர் எழுதிய ‘இழந்த துவாரகை’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறுகிறார். கடலுள் மூழ்கி விட்ட துவாரகையின் அதிசயம காண பல கோடி செலவாகும் எனவும் அதே மேலை நாட்டு நகர பாணியில் அயோத்தியா நகரம் அமைக்கப் பட்டதாகவும் கூறுகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X