'எச் - 4' விசாவினருக்கு வேலை தடை விதிக்க கோர்ட் மறுப்பு

Updated : நவ 11, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (5)
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்காவில் வேலை பார்க்கும், 'எச் - 1பி' விசா பெற்றுள்ள வெளிநாட்டவரின் மனைவி அல்லது கணவருக்கு, 'எச் - 4' விசா வழங்கும்போது, வேலை பார்ப்பதற்கும் அனுமதி அளிக்கும் சட்ட விதிகளுக்கு தடை விதிக்க, அமெரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.


அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு, எச் - 1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்த எச் - 1பி விசா பெற்றுள்ளோரின் கணவர் அல்லது மனைவிக்கு, எச் - 4 விசா வழங்கப்படுகிறது.இந்த எச் - 4 விசா பெற்றுள்ளோரில், தகுதியுடையவர்களுக்கு வேலை பார்க்க அனுமதி அளிக்கும் சட்டத்தை, முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கொண்டு வந்தார்.

இந்த சட்டத்தை எதிர்த்து, 'சேவ் ஜாப்ஸ் யு.எஸ்.ஏ.,' என்ற அமெரிக்க தொழிலாளர்களின் அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு, கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த சட்ட விதிக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்தது. மேலும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி, கீழ் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.இதனால், அமெரிக்காவில் பணியாற்றும் எச் - 4 விசா பெற்றுள்ளவர்களுக்கு, தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது. இது, அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
11-நவ-201917:58:19 IST Report Abuse
Balaji தற்காலிக நிரவாரணம்...... அதிபர் அமெரிக்கர்கள் அல்லாதவர்கள் பணியில் இருப்பதை எதிர்ப்பவர்..... ஆனால் அமெரிக்கர்கள் அல்லாதோர் பணியில் இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதை அறியாதவரும் கூட...... திரும்ப மொதல்லேந்துனு சொல்லிட்டாங்க, பாக்கலாம்........
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
11-நவ-201905:41:24 IST Report Abuse
 Muruga Vel விவசாயம் மற்றும் ஓட்டல் போன்ற துறைகளில் அமெரிக்கர்கள் வேலை செய்வதில்லை .. அமெரிக்க சட்டப்படி காலியிடங்களுக்கான தேவைகளை விளம்பரப்படுத்தி அமெரிக்க தொழிலாளர்கள் கிடைக்காத பட்சத்தில் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவது நடைமுறையில் இருக்கிறது .. கணவன் மனைவி வேலை செய்யாவிட்டால் நியூ யார்க் ..கலிபோர்னியா ..மாநிலங்களில் வாழ்க்கை நடத்துவது ரொம்ப கடினம் ...
Rate this:
Share this comment
fazal - ,
11-நவ-201913:01:32 IST Report Abuse
fazalappadi kastapatu eduku America la erukanum?...
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
11-நவ-201915:36:13 IST Report Abuse
 Muruga Velஎல்லாரும் கல்யாணம் பண்ண ஆசை படறதில்லயா...
Rate this:
Share this comment
Madhav - Chennai,இந்தியா
11-நவ-201916:14:55 IST Report Abuse
Madhavசான் வயிற்றுக்காக தான் எல்லாம். இங்கே கிடைக்கும் சம்பளத்தை விட அங்கு அதிகம், வாயை கட்டி வயிற்றை கட்டி தான் காசை மிச்சம் பிடித்து தான் அடுத்த தலைமுறைக்காக வாழ்க்கை நடக்கிறது. நாமெல்லாம் அம்பானி அதானி வீட்டு பிள்ளைகள் கிடையாது அதனால் தான் எல்லோரும் திரைகடல் ஓடியும் திரவியம் தேடுகிறோம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X