தார்ரோடு களிமண் ரோடாக உருமாற்றம்

Added : நவ 11, 2019
Share
Advertisement

கமுதி:கமுதி அருகே விவசாய நிலங்களுக்கு நடுவே செல்லும் தார்ரோடு, களிமண் ரோடாக உருமாறியுள்ளதால், சிறுமழை பெய்தாலே அரசு போக்குவரத்து சேவையும் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

கமுதி அருகே பேரையூரிலிருந்து சாமிபட்டி வழியாக செங்கோட்டைப்பட்டி மாணவர்களின் மேல்நிலைக்கல்விக்காக தினமும் காலை, மாலை வேளைகளில் அரசு பஸ் இயக்கப்படுகிறது.
விவசாய நிலங்களின் நடுவே செல்லும் செங்கோட்டைப்பட்டி ரோடு குறுகலாகவும், சீரமைத்து 8 ஆண்டுகளுக்கு மேலாகியும், மராமத்து பணிகள் ஏதும் நடைபெறாததால், ரோடு குண்டும்,
குழியுமாக சேதமடைந்துள்ளது.

சிறுமழை பெய்தாலே ரோட்டில் மழைநீர் தேங்கியும், களிமண் ரோடாகவும் உருமாறி
விடுகிறது. மழை காலங்களில் அரசு பஸ் சேவை ரத்து செய்யப்படுகிறது.12 கிமீ., துாரம் நடந்து சென்று, கமுதி, முதுகுளத்துாருக்கு பயணித்து படிக்கும் கட்டாயத்திற்கு, மாணவர்கள்
ஆளாகியுள்ளனர். செங்கோட்டைப்பட்டிக்கு செல்லும் ரோட்டினை சீரமைக்க, மாவட்ட
நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X