ஆட்டோ ஓட்டுனர்கள் அடாவடியால் நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Added : நவ 11, 2019
Share
Advertisement

சென்னை: கிண்டி, ரேஸ் கோர்ஸ் சந்திப்பில், சாலையை மறித்து ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.மெட்ரோ ரயில் பணி துவங்கும்போது, அண்ணாசாலையில் இருந்து, தாம்பரம், பூந்தமல்லி நோக்கி செல்லும் அனைத்து பேருந்துகளும், கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால், ரேஸ்கோர்ஸ் சந்திப்பில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதை தடுக்க, மாநகராட்சி சார்பில், 'மெட்ராஸ் ரேஸ் கிளப்' நிர்வாகத்திடம் நிலம் பெற்று, 1,200 அடி நீளம், 20 அடி அகலத்தில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்பின், ஆட்டோ, ேஷர் ஆட்டோக்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டது.ஆனால், அந்த இடத்தில் நிறுத்தாமல், சாலையை மறித்து நிறுத்தி, பயணியரை ஏற்றுகின்றனர். இதனால், மாலை நேரத்தில், அண்ணாசாலை வரை நெரிசல் ஏற்படுகிறது. மேலும், ரயில் நிலையத்தில் இருந்து, சாலையை கடக்கும் பயணியர், மிகவும் சிரமப்படுகின்றனர்.நெரிசல் ஏற்படாத வகையில், ஆட்டோ நிறுத்தத்தை முறைப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறுகையில், 'சாலையை மறித்து ஆட்டோக்களை நிறுத்தி, பயணியரை ஏற்றுவதால், ரேஸ் கோர்ஸ் பகுதியை கடக்க தாமதமாகிறது. 'தட்டிக் கேட்டால், எங்கள் மீதே அடிக்க பாய்கின்றனர். போலீசாரும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X