குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ஆவடியில் உள்ள அரசு பள்ளிகளில், சிற்றுண்டி வழங்கும் திட்டம் துவங்கப்பட உள்ளது.பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளி மாணவ- - மாணவியருக்கு, சிற்றுண்டி வழங்கும் மாதிரி திட்டத்தை, தனியாருடன் இணைந்து செப்டம்பர் மாதம் துவங்கி வைத்தார்.இதன்படி, ஈரோடு மாவட்டம், கோபி, கரட்டடிபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் செயல்படுத்தப்படுகிறது.இதைத்தொடர்ந்து, ஆவடி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ- - மாணவியருக்கு, காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, நவ., 14ம் தேதி, குழந்தைகள் தினத்தன்று துவங்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.இது குறித்து, மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:பெரும்பாலான அரசு பள்ளி மாணவ- - மாணவியர், காலை உணவு சாப்பிடுவதில்லை. இதனால் அவர்களுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுகிறது. இதை தடுக்க அரசு, தனியாருடன் இணைந்து, அரசு பள்ளிகளில் காலையில், சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ஆவடியில் செயல்படுத்த உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- நமது நிருபர்- -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE