சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் அருகே மீனவர் பலி

Added : நவ 11, 2019
Advertisement

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடலில் தவறி விழுந்த மீனவர் மூழ்கி
உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் மண்டபம் பகுதியில் சூறாவளி காற்று வீசியதால், கடலில் கொந்தளிப்பு
ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது.மண்டபம் தென் கடற்கரையில் நிறுத்தி இருந்தமீராமுகைதீன் என்பவரது விசைப்படகை பாதுகாப்பு கருதி, வேதாளை கடற்கரையில் படகை நிறுத்திட அன்றிரவு மீனவர்கள் முருகவேல்40, ரகுமான்கான், ஹமீதுஉசேன், இருளப்பன்
ஆகியோர் படகுடன் வேதாளை நோக்கி சென்றனர்.

அப்போது படகில் இருந்து எதிர்பாராமல் முருகவேல் கடலில் விழுந்து மூழ்கினார். பிற
மீனவர்கள்தேடி பார்த்தும் மீனவர் கிடைக்காததால், அவர் உயிரிழந்திருக்கலாம் என மற்ற
மீனவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த மரைன் போலீஸ் எஸ்.ஐ., ராஜ்குமார் வழக்கு பதிந்து, உயிரிழந்த மீனவர் உடலை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X