பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி கட்டடம் புனரமைப்பு

Added : நவ 11, 2019
Advertisement

சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள, 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஆசிரியர் கல்லுாரி கட்டடம், 2 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட உள்ளது.அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், 1856ல், வேப்பேரியில் ஆசிரியர் பயிற்சி பள்ளி துவங்கியது. பின்னர், ஆசிரியர் கல்லுாரியாக செயல்பட்டது. 1889ல், சைதாப்பேட்டையில் நிரந்தர கட்டடம் கட்டிய பின், கல்லுாரி இங்கு செயல்பட்டு வருகிறது.தற்போது, 450 பேர் படிக்கின்றனர். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, அருகில் புதிய கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. இருந்தாலும், 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடம், உறுதித்தன்மையுடன் உள்ளதால், அதே நிலையில் பயன்படுத்த, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.சில, புனரமைப்பு பணிகள் செய்ய வேண்டி உள்ளன. இதற்காக, 2 கோடி ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. கோப்புகள், நிர்வாக அனுமதிக்காக உள்ளன.ஜனவரி மாதம், புனரமைப்பு பணி துவங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X