பொது செய்தி

தமிழ்நாடு

பெயின்டர் பயிற்சி முடித்த 50 பெண்கள் தொழில் திறன் சான்று பெற்று அசத்தல்

Added : நவ 11, 2019
Share
Advertisement

கட்டுமான துறையில் முதன் முதலாக, சென்னையைச் சேர்ந்த, 50 பெண்கள் பெயின்டர் பணிக்கான பயிற்சியை முடித்து, மத்திய தொழில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறையின் சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.கட்டுமான துறையில், பெண்கள் பெரும்பாலும் சித்தாள்களாகவே பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 400 முதல், 500 ரூபாய் மட்டுமே, ஊதியமாக வழங்கப்படுகிறது.இதே வேலை ஆண் செய்யும் நிலையில், அவருக்கான ஊதியம், 700 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. கட்டுமான பணியில் பெண்கள் சித்தாள் நிலைக்கு மேல் வேறு எந்த நிலைக்கும் செல்ல முடியாத சூழல் நிலவியது.இந்நிலையில், சித்தாள் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்களில், 50 பேரை தேர்வு செய்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கம், கட்டுமான தொழிலாளர் நல வாரியம் இணைந்து, 30 நாள் பெயின்டிங் தொழில் குறித்த பயிற்சி முகாம் நடத்தின.இதில் பெயின்டிங் பணி குறித்த பல்வேறு நுட்பங்கள் அவர்களுக்கு கற்று கொடுக்கப்பட்டன. மேலும், கள அனுபவத்துக்காக, மடிப்பாக்கம் பகுதியில், சத்துணவு கூட கட்டடங்களை புதுப்பித்து, பெயின்டிங் செய்து பயிற்சி அளிக்கப்பட்டது.இதன் பின், 'நிபான் பெயின்ட்ஸ்' நிறுவனம் சார்பில், ஒரு வார கால கூடுதல் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை அங்கீகரித்து, மத்திய அரசின் தொழில் திறன் சான்று வழங்கப்பட்டுள்ளது.மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறையால் அங்கீகரிக்கப்பட்ட பெயின்ட்ஸ் மற்றும் கோட்டிஸ் ஸ்கில் கவுன்சில், இந்த சான்றிதழை வழங்கியது. இதையடுத்து, பல்வேறு கட்டுமான திட்டங்களில் இவர்கள் பெயின்டிங் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.ஆண்களுக்கு நிகராக, இவர்கள் ஒரு நாளைக்கு, 1,000 ரூபாய் வரை சம்பளம் பெறும் நிலை ஏற்படும். கட்டடங்களில் உட்புற பகுதிகளில் இவர்கள் பாதுகாப்பான முறையில், பணியில் ஈடுபடுத்தப்படுவர் என, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X