பொது செய்தி

தமிழ்நாடு

தமிழாற்றுப்படை வரிசைப்படுத்துதல்

Added : நவ 11, 2019
Advertisement

வைரமுத்துவின் தமிழாற்றுப்படைமூவாயிரம் ஆண்டுகால ஆளுமைகளை வரிசைப்படுத்தி, 'தமிழாற்றுப்படை' மூலம் கவிஞர் வைரமுத்து ஆவணப்படுத்தியுள்ளார். அவை புத்தகத்தோடு நின்று விடாமல், காணொளியாக்கும் முயற்சியில், கலைஞர் தொலைக்காட்சி இறங்கியுள்ளது.தமிழாற்றுப்படையின் ஒவ்வோர் அத்தியாயங்களையும், வாரந்தோறும் ஞாயிறு மாலை, 6:00 மணிக்கு, கலைஞர் செய்திகள் டிவியில் ஒளிபரப்பாகிறது. ஒவ்வோர் அத்தியாயமும், 50க்கும் மேற்பட்ட ஓவியங்கள் மூலம் அழகுசேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் ஆளுமையின் பெருமையை ஒவ்வொருவரும் அறியலாம்.தொல்காப்பியர், திருவள்ளுவர் என, சங்க கால புலவர்களில் துவங்கி, திருமூலர், பாரதியார், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற ஆளுமைகள் தமிழையும், தமிழர்களையும், எப்படி உலக அரங்கின் முதல் வரிசையில் அமர வைத்தனர் என்பதை, தகுந்த ஆதாரங்களோடு சொல்கிறது, இந்த தமிழாற்றுப்படை.---------காதோடு தான் நான் பேசுவேன்'பெப்பர்ஸ் டிவி'யில் திங்கள் காலை, 11:00 மணிக்கு, நேரலையாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, காதோடு தான் பேசுவேன். உளவியல் தொடர்பான ஆலோசனை வழங்கும் இந்நிகழ்ச்சியை, மனநல ஆலோசகர் ராஜ ராஜேஸ்வரி வழங்குகிறார். மனம் சொல்வதை உடல் கேட்க வேண்டும். மனமும், உடலும் ஒரு நேர்கோட்டில் செல்லும் போது, வாழ்வு இனிப்பாகும் என்கிறார்' இவர்.இன்று இல்லற வாழ்வில் விட்டுக்கொடுக்காமை, காதல் உறவில் விரிசல், ஆழமான உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் குழப்பம் போன்ற பல பிரச்னைகளை மக்கள் சந்திக்கின்றனர்.இதுபோன்ற பிரச்னைகளை யாரிடம் சொல்வது, அதற்கான பதிலை யாரிடம் பெறுவது என்ற கேள்விக்கு விடையே பெப்பர்ஸ் டிவியில், காதோடு தான் நான் பேசுவேன் என்கின்றனர், இந்நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X