பொது செய்தி

தமிழ்நாடு

தேவிபட்டினம் வெட்டுக்குளம் ஊரணியில் தண்ணீர் நிரம்பியது

Added : நவ 11, 2019
Advertisement

தேவிபட்டினம்:பத்து ஆண்டுகளுக்கு முன்பு தேவிபட்டினம் வெட்டுக்குளம் ஊரணி மூலம் தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர் பயன்படுத்தி வந்தனர்.

இந்த ஊரணிக்கு வரும் வரத்து கால்வாய்கள் முறையாக சீரமைக்கப்படாததாலும், போதிய பருவமழை இல்லாத நிலையாலும், கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஊரணியில் தண்ணீர்
தேக்கப்பட முடியாத நிலை இருந்து வந்தது. தேவிபட்டினம் ஊராட்சி நிர்வாகத்துடன், சமூக ஆர்வலர்கள் இணைந்து வரத்து கால்வாய்களை சரிசெய்து, இந்த ஊரணியில் தண்ணீர் தேக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முத்துரெகுநாதபுரம், கழனிக்குடி, மாதவனூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பூ ஓடை வழியாக வீணாக சென்று கடலில் கலக்கும் உபரி நீரை தடுத்து இந்த ஊரணியை நிரப்பிஉள்ளனர். இந்த ஊரணி 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் பெரும் மகிழ்சியடைந்துள்ளனர். இந்த பணிகளில் ஊராட்சி நிர்வாகத்தினர், துவா அமைப்பினர்
உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X