பொது செய்தி

தமிழ்நாடு

இலவச, 'மல்டிமீடியா' பயிற்சி

Added : நவ 11, 2019
Advertisement

சென்னை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, இலவச மல்டிமீடியா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் உதவி பொது மேலாளர், ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, சென்னை, தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தில், வேலைவாய்ப்பு சார்ந்த, மல்டிமீடியா, ஆடியோ எடிட்டிங் உள்ளிட்ட, இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குகிறது.இதில், 18 வயது முதல், 35 வயதுக்குள் உள்ள, குறைந்தபட்சம், 10ம் வகுப்பு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்.பங்கேற்க விரும்புவோர், '350, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், முதல்மாடி, கிடங்கு கட்டடம், கோ - ஆப்டெக்ஸ் வளாகம், பாந்தியன் சாலை, எழும்பூர் - 08' என்ற முகவரியில், நேர்முகத் தேர்வு நடைபெறும். நேர்முகத் தேர்வில் பங்கேற்க, இன்று முதல், 14 வரை, அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் செல்ல வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 1203, 2819 2506, 2819 2407 என்ற, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X