பொது செய்தி

தமிழ்நாடு

3,200 நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி

Added : நவ 11, 2019
Advertisement
 3,200 நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி

மணலி: மணலி மண்டலத்தில், 3,200 தெருநாய்களுக்கு, வெறிநாய் கடி தடுப்பூசி போடும், பணி நடக்கிறது.மணலியில், தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருந்தது. மணலி மண்டல நல அலுவலர் பிரபாவதி அறிவுறுத்தல்படி, கால்நடை மருத்துவர் தயாநிதி தலைமையில், பல்லாவரத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள, நாய் பிடிப்பதில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் மருத்துவர் அடங்கிய, ஏழு பேர் குழு, தெருநாய்களுக்கு, தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.அதன்படி, சமீபத்தில், வார்டு, 15 மற்றும் 16ல், 900 நாய்களுக்கும்; 20, 21 வார்டுகளில் உள்ள, 950 நாய்களுக்கும், வெறிநாய் கடி தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.இதன்படி, மண்டலம் முழுதும், 3,200 நாய்களுக்கு, தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ள உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.இப்பணியில், மண்டல பகுதி சுகாதார அலுவலர் ஷேக் மீரான், ஆய்வாளர்கள் சதீஷ், ஆனந்த் மற்றும் மண்டல சுகாதார ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X