பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் தேங்கிய நெல் வயல்களுக்கு ஆலோசனை

Added : நவ 11, 2019
Advertisement

ராமநாதபுரம்:மழை நீர் தேங்கியுள்ள நெல்வயல்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேளாண் துறை அதிகாரி ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

மண்டபம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் நகராஜன் தெரிவித்துள்ளதாவது: வயல்களில் சரியான வடிகாலுக்கு வழி வகை செய்ய வேண்டும். 2 சதவீதம் டி.ஏ.பி., ஒரு சதவீதம்
பெட்டாசியம் குளோரைடு கரைசல் இலையின் மேற்பகுதியில் தெளிப்பதன் மூலம் நீர்
தேங்குவதால் பயிர் வெளிறும் பிரச்னையில் இருந்து மீட்கலாம்.இளம் பயிருக்கு ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன் 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு 18 கிலோ, ஜிப்சம் மற்றும்
பெட்டாஷ் 17 கிலோ கலந்து மேலுரமாக இட வேண்டும்.

இலை வழி உரமாக உரக்கரைசல் தெளிக்க 1 ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ
ஜிங் சல்பேட்டை, 200 லிட்டர் நீரில் கலந்து காலை, மாலை இரு வேளைகளில் தெளிக்கலாம்.

அல்லது மணிச்சத்தை டி.ஏ.பி., உரத்தின் மூலமாக 2 சதவீத அளவில் தெளிக்க வேண்டும்.
நுண்ணுாட்டச்சத்து குறைபாட்டினை தவிர்க்க ஏக்கருக்கு 200 லிட்டர் நீருடன் 2 கிலோ யூரியா ஒரு கிலோ ஜிங்சல்பேட், 150 கிராம் காப்பர் சல்பேட் 100 கிராம் போராக்ஸ் ஆகியவற்றை கலந்து இலை வழியாக தெளிக்கலாம்.

இலை உறை கருகல் நோய் தற்போது தென்பட்டால் புரப்பிகனோசோல் 1மி.லி., அல்லது
கார்பன்பென்டாசியம் 1கிராம்ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம், என அவர்
தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X